​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தூத்துக்குடியில் 11 பேர் உயிரிழந்தது துயரம் அளிக்கிறது : ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான தருணத்தில்  மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட சமூகத்தின் அனைத்து...

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிட்டது யார்? : கமல்ஹாசன்

தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஆணை பிறப்பித்தது யார்?. என்ற கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர். ஸ்டெர்லைட் ஆலைக்கு காலையில் அரசே பூட்டு...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அரச பயங்கரவாதம் என ராகுல்காந்தி சாடல்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அரச பயங்கரவாதத்தின் கொடிய உதாரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், அநீதிக்கு எதிராக போராடிய குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலையும், பிரார்த்தனைகளையும்...

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு ரத்து, தூத்துக்குடி செல்ல உள்ளதாக மு.க.ஸ்டாலின் தகவல்

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை ரத்து செய்து விட்டு, துப்பாக்கிச் சூடு நடைபெற்ற தூத்துக்குடிக்கு நேரில் செல்ல உள்ளதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்த மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இதனைத்...

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கவும், சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் மதுக்கடை சூறை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் உள்ள மதுக்கடையை அக்கிராம மக்கள் அடித்து நொறுக்கினர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்கள் மீது போலிசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இச்சம்பவத்தினைக் கண்டித்து இடிந்தகரை மக்கள் பேரணியாகச்...

தவிர்க்க முடியாத சூழலில் தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கிச்சூடு - அமைச்சர் ஜெயக்குமார்

தூத்துக்குடி வன்முறை சம்பவத்தில், தவிர்க்க முடியாத சூழலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை...

தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு அவரது மகள் அஞ்சலி செலுத்திய உருக்கமான காட்சி

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அவரது மகள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய காட்சி, பார்ப்போரை கலங்க வைத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தீவிரவாதிகளுடனான சண்டையின்போது, இரு குண்டுகள் துளைத்து...

சித்தூரில் எஸ்.பி. பங்களா பாதுகாப்பு பணியிலிருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கி குண்டு பட்டு உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் சித்தூரில் எஸ்.பி. பங்களா பாதுகாப்பு பணியிலிருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கி குண்டு பட்டு உயிரிழந்தார். சித்தூர் எஸ்.பி. ராஜசேகரபாபுவின் பங்களா சித்தூரில் கொங்காரெட்டிபள்ளியில் உள்ளது. அங்கு ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற ஆயுதப்படைக் காவலர் உள்ளிட்டோர் நேற்றிரவு பாதுகாப்புப்...

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன தனுஷ் பீரங்கி அடுத்த வாரம் சோதனைக்கு உட்படுத்த திட்டம்

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன தனுஷ் பீரங்கியின் சோதனை, அடுத்த வாரம் நடைபெறுகிறது. ஸ்வீடன் நாட்டை சோந்த போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அதே தொழில்நுட்பத்தில் தனுஷ் என்ற பெயரில் உள்நாட்டிலேயே பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு...