​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் ஆறுதல் தெரிவிக்காதது வெட்கக்கேடானது - ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்கூடத் தெரிவிக்காதது வெட்கக் கேடானது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரை தல்லாக்குளத்தில் திமுக பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை...

வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் மீது தாக்குதல்

வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையனை, உணவக உரிமையாளர் தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக கடந்த 24ஆம் தேதி வணிகர் சங்க பேரவை கடைஅடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. அன்றைய தினம், பெரம்பூர் வடக்கு நெடுஞ்சாலையில் த.வெள்ளையன்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை திசைதிருப்ப முயற்சி - மு.க. ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் உண்மையை மறைக்கவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார். மத்தியில் 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ள பாஜக அரசு...

தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை செயல்படாது என அரசாணை வெளியிட வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கப்படாது என்பதை அரசாணையாக வெளியிட்டால் மட்டுமே பிரதே பரிசோதனை செய்ய ஒப்புதலளிப்போம் என துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேரது குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நிபந்தனை விதித்துள்ளனர்.  தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரில், கிளாட்சன்,...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு திமுக சார்பில் தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் வீதம் மொத்தம் 26 லட்ச...

எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி..

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் எல்லைக்கு அப்பால் இருந்து இந்திய நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர், அடிக்கடி அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர...

4 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது.. நகர மற்றும் புறநகர்ப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்..

தூத்துக்குடியில் 4 நாட்களுக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ளதால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.  தூத்துக்குடி முழுவதும் பெட்டிக்கடை முதல் மளிகைக்கடை, டிபார்மண்ட் ஸ்டோர் என அனைத்தும் 100 சதவீதம் திறக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும்...

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்த வேண்டும் என்ற உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்தி பாதுகாத்து வைக்க வேண்டும் என உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான சண்முகம் என்பவரது தந்தை பாலய்யா என்பவர், தனது மகனின் உடலை ஒப்படைக்க...

தூத்துக்குடி சம்வம் தொடர்பாக CBI விசாரணை கோரும் மனுவிற்கு தமிழ்நாடு அரசு மற்றும் CBI பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்வம் தொடர்பாக, சிபிஐ விசாரணை கோரும் மனுவிற்கு, தமிழ்நாடு அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர், உயர்நீதிமன்றத்தில், பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.  அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில்...

B.E படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் மேலும் மூன்று நாட்கள் நீட்டிப்பு

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்காக, அண்ணா பல்கலைகழகத்தில் விண்ணப்பிக்க மேலும் 3 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்ட 3 மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுமைக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க...