​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் இன்றும், நாளையும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக வங்கிக் கிளை முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில்...

திருவாரூரில் தியாகராஜ சுவாமி ஆழித்தேரோட்டம் கோலாகலம்

திருவாரூரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆழித்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.  அலைகடலென பக்தர்கள் திரண்டு தேர் இழுப்பதால்தான் திருவாரூர் தேரோட்டம் ஆழித் தேரோட்டம் என்றழைக்கப்படுவதாகச் சொல்லுபவர்கள் உண்டு. கி.பி. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தனது...

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேராட்டம் கோலாகலம்

வரலாற்று சிறப்பு வாய்ந்த திருவாரூர் ஆழித்தேரோட்டம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர். வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் ஆழித்தேர் சிறப்பு வாய்ந்தது. இச்சிறப்புமிக்க ஆழித்தேரோட்டத்தையொட்டி கடந்த 20ஆம் தேதி தியாகராஜ சுவாமி ஆலயத்தில் இருந்து...

திருடர்களின் தலைவன் திருவாரூர் முருகன்... சென்னை போலீசார் தேடுதல்

தென் மாநில காவல் துறையினரால் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வரும் திருவாரூர் முருகன் தனது கூட்டாளிகளுடன் சென்னையில் தொடர் கொள்ளையை அரங்கேற்றி காவல் துறையினரை அதிர வைத்துள்ளான். அவனது கூட்டாளிகள் 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா,...

40 வயது நபருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்கப்பட்ட 17 வயது சிறுமி

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் 17 வயது சிறுமியாக இருந்தபோது 40 வயதான உறவினருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்கப்பட்டவர், 2 ஆண்டுகளுக்குப் பின் அவர்களிடமிருந்து தப்பி வந்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தஞ்சமடைந்தார். தற்போது 19 வயதாகும் அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி கடந்த...

பொருளாதார மற்றும் தொழில் வழித்தடங்களாகும் மாநில நெடுஞ்சாலைகள் - நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு

கிழக்கு கடற்கரைச் சாலை பொருளாதார வழித்தடம் மற்றும் சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடம் ஆகிய திட்டங்களின் கீழ் 15 நெடுஞ்சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்துடன் இணைந்து 6 ஆயிரத்து...

சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்கமாட்டேன் - திவாகரன்

சசிகலாவை இனி சகோதரி என அழைக்கப் போவதில்லை என்று திவாகரன் தெரிவித்துள்ளார். சசிகலா குடும்பத்தில் தினகரனுக்கும் திவாகரனுக்கும் அண்மையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர். இதை அடுத்து அம்மா அணி என்ற பெயரில் செயல்பட...

மன்னார்குடி டி.எம்.பி வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த 4 பேர் கைது-ரொக்கப்பணம் மற்றும் துப்பாக்கி பறிமுதல்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மெர்கண்டைல் வங்கிக் கொள்ளை சம்பவத்தில், வங்கி ஊழியர் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக் கிளைக்கு, கடந்த 7 ஆம் தேதியன்று துப்பாக்கிகளுடன் வந்த, 5 பேர் கொண்ட கும்பல்,...

TMB வங்கியில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மணப்பாறை TMB வங்கி ஊழியரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மணப்பாறையை சேர்ந்த அந்த வங்கியின் ஊழியர் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மன்னார்குடியை அடுத்துள்ள அசேஷம் கிளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்...

வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை விரைவில் பிடிப்போம் - டிஐஜி லோகநாதன்

மன்னார்குடியில், வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை விரைவில் பிடிப்போம் என தஞ்சாவூர் சரக டிஐஜி லோகநாதன் தெரிவித்திருக்கிறார். மன்னார்குடி அசேஷம் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில், கடந்த 7ஆம் தேதி துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக, மன்னார்குடி...