​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காவல்துறை, தீயணைப்புத்துறை தொடர்பான அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் வெளியிட்டார்

30 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கு நலவாரியம் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார். தடய அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் 2 பேருக்கு இந்த ஆண்டு...

சாலையோர மீன் வியாபாரத்திற்கு எதிர்ப்பு - மீன் வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்  சாலையோர மீன் வியாபாரத்தை தடுக்க வலியுறுத்தி, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மீன் வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார்குடியில் அரசு சார்பில் திறக்கப்பட்ட நவீன மீன் அங்காடியை நம்பி 300-க்கும் மேற்பட்ட மீன் வியாபாரிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில்...

ரூ.900 கோடி செலவில் தூர்வாரப்படும் நாகை, திருவாரூர் மாவட்ட ஆறுகள் - அமைச்சர் காமராஜ் தகவல்

திருவாரூர், நாகை மாவட்டங்களில் 900 கோடி ரூபாய் செலவில் முக்கிய ஆறுகள் மற்றும் கிளை ஆறுகளைத் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் வடுவூரில், 316 ஏக்கர் பரப்புள்ள ஏரியைத் தூர்வாரும் பணியை அவர் தொடங்கி...

பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் - கணவர் கைது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து கணவர் கைது செய்யப்பட்டார். ஏத்தகுடி கிராமத்தைச் சேர்ந்த தாரகை என்ற பெண் அவரது வீட்டில் தூக்கிடப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். கணவர் நாகூர்கனி தான் தாரகையை...

காவிரி மேலாண்மை ஆணையம் அமைவதில் தமிழக அரசு உறுதி - காமராஜ்

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், மேட்டூர் அணையில் தேவையான தண்ணீர் வந்த உடனே பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று...

திருவாரூரில் பருத்திக்கு அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாரூரில், பருத்திக்கு அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். காவிரி பிரச்சனைக்கு மத்தியில், வலங்கைமான், குடவாசல், நன்னிலம், நீடாமங்கலம் ஆகிய இடங்களில், விவசாயிகள் மாற்றுப்பயிராக பருத்தியை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக, திருவாரூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி...

மீன்மார்க்கெட்டை அகற்றக்கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற பாஜகவினர் கைது

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மீன் மார்க்கெட் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆசாத் நகரில் உள்ள மீன் மார்க்கெட் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி அதனை அங்கிருந்து அகற்ற வேண்டும் என பாஜக...

கோலாகலமாக நடைபெற்ற ஆவணியப்பர் ஆலய கும்பாபிஷேக விழா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தென்பரை பாமணி ஆற்றின் மேற்கரையில் அமைந்துள்ள ஆவணியப்பன் ஆலயத்தின் சீரமைப்பு பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுபெற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த...

புதிய கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்தார் திவாகரன்

சசிகலாவின் சகோதரர் திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் கட்சியின் கொடியை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று அறிமுகம் செய்தார். டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த அவர், அம்மா அணி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து, மன்னார்குடியில் இன்று...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்தது.  சேலம் பழைய பேருந்துநிலையம், 5 ரோடு, சூரமங்கலம், ஜங்ஷன், கோரிமேடு, அஸ்தம்பட்டி, சிலநாயக்கன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து...