​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருப்பதி கோவிலில் ஜேஷ்டாபிசேக விழா -19-ஆம் தேதி மலையப்பசாமியின் தங்க கவசம் கழற்றப்படுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 24-ந்தேதியில் இருந்து 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. கோவிலின் உற்சவரான மலையப்ப சாமியின் தங்க கவசத்தை கழற்றி, சாமிக்கு திருமஞ்சனம் செய்ய நடைபெறும். இந்த விழாவை ஒட்டி 19-ஆம் தேதி அன்று தங்க கவசம் கழற்றப்படுகிறது....

சென்ட்ரலில் பெற்றோரால் தவற விடப்பட்ட 3 வயது பெண் குழந்தையை மீட்ட ரயில்வே போலீசார்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெற்றோரால் தவற விடப்பட்ட மூன்று வயதுக் குழந்தை சிறிது நேரத்திலேயே பத்திரமாக மீட்கப்பட்டது.  சின்னக் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர், மனைவி மற்றும் 3 வயது இரட்டை குழந்தைகளுடன் திருப்பதி செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். இன்று அதிகாலை நடைபெற்ற அபிஷேக சேவையில் பங்கேற்று தரிசனம் செய்த அமைச்சருக்கு கோயில் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு தீர்த்த பிரசாதங்களையும் சுவாமி படத்தையும்...

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை முறையாக இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை முறையாக இல்லை என்று தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துப் புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில்...

வங்கி ஊழியர்கள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வேலை நிறுத்தம் மேற்கொள்ள திட்டம்

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வேலை நிறுத்தங்களில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாத இறுதியில் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால்...

திருப்பதி திருமலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் ஸ்ரீவாரி பாதம் பகுதிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

திருப்பதி திருமலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் ஸ்ரீவாரி பாதம் பகுதிக்கு செல்வதற்கு பத்கர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக யானைகளின் வருகை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், நாராயணகிரி மலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி, அங்குள்ள ஸ்ரீவாரி பாதம்...

அரசு கல்லூரி உபகரணங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கில், முன்னாள் கல்லூரி இயக்குநர் உள்ளிட்ட 5 பேருக்கு தண்டனை

அரசு கல்லூரி ஆய்வுக்கூட உபகரணங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கில், முன்னாள் கல்லூரி கல்வி இணை இயக்குநர் உள்ளிட்ட 5 பேரின் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 1995ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த முறைகேட்டால் அரசுக்கு 56 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வழக்கு...

ஏழுமலையான் கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு சதி: சந்திரபாபு நாயுடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு சதி செய்ததாகஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார். அதிக பக்தர்கள் வந்து செல்லும், அதிக காணிக்கைகள் வரும் கோயிலாக திருப்பதி உள்ளது. இந்நிலையில், சித்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர் 2003ஆம்...

ஆந்திராவில் செயின் பறித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

ஆந்திராவில் செயின் பறித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். ஆந்திரமாநிலம் சத்யவேடு அருகே திருப்பதியைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவரது மனைவியிடம் இருசக்கர வாகனங்களில் கூட்டமாக சென்ற 12 பேர் வழிப்பறி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாஸ்கர் பக்கத்து கிராமத்தில் வசிக்கும்...

கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங் கொளத்தூரில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, போதைப் பொருள் கடத்தல்...