​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காதலியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை செய்த நபர் போலீசில் சரண்

திருச்சியில் காதலியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை செய்த நபர் போலீசில் சரணடைந்தார். சோமரசம்பேட்டை, சுண்ணாம்புக்காரபட்டியைச் சேர்ந்தவர் நடராஜ். கட்டிடத் தொழிலாளியான இவர், கரூர் தோகைமலைக்கு வேலைக்குச் சென்ற போது ஏற்கெனவே திருமணமாகி கணவனை இழந்த நீலா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நடராஜின்...

தமிழகம் முழுவதும் காய்ச்சல் காரணமாக எராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை

தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்புக்கான எராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  திருவண்ணாமலை மாவட்டம் காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமி பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். கந்தன் என்பவரின் மகளான கவுசல்யா 15 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையிலும், அரசு...

அறந்தாங்கி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 124 சவரன் நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். அறந்தாங்கி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த நூர்தீன், அப்பகுதியில் ஒலி, ஒளி அமைப்பகம் நடத்தி வருகிறார்....

12வது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்ல மறுத்த பெண்ணுக்கு, வீட்டிலேயே சுகப்பிரசவம்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே 12வது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்ல மறுத்த பெண்ணுக்கு, வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. முசிறி கீழத்தெருவைச் சேர்ந்த கண்ணன் - சாந்தி தம்பதியினருக்கு ஏற்கனவே 11 குழந்தைகள் பிறந்தன.  அதில் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்ட நிலையில், சாந்தி  மீண்டும்...

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 17 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நேற்று இரவு கோலாலம்பூரில் வந்த ரியாஸ் அகமது என்ற பயணியை சந்தேகத்தின் பேரில் அவர்கள்...

மாணவர்களால் ஆசிரியைக்கு நேர்ந்த கொடுமை..! நில்.. கவனி.. குளி..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பள்ளி ஆசிரியை குளிப்பதை, கடந்த 2 வருடமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய 3 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி அடுத்த ஆவாரம் பட்டியில் தான் இந்த கொடுமையான நிகழ்வு...

தமிழகத்தில் புதிதாக 1.97 கோடி ஸ்மார்ட் கார்டுகள் - அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் புதிதாக ஒரு கோடியே 97 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டிருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி...

குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருச்சி அருகே இருசக்கர வாகனம் மீது மோதிய அரசுப் பேருந்து, நிலைதடுமாறி, பேருந்து நிறுத்தத்தில் புகுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 2 பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். திருச்சியில் இருந்து கம்பம் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. ராம்ஜி நகர்...

இலங்கை தமிழர்களுக்கு எதிரான செயல்களுக்கு வைகோ கண்டனம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் செயல்களை உலக நாடுகளின் உதவியுடன், மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டிருக்கிறார். புதுக்கோட்டையில் மதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்துக் கொண்ட அவர், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்...

பன்றிக் காய்ச்சலை தடுக்க கைகுலுக்குவதை விட்டுவிட்டு தமிழ் முறைப்படி வணக்கம் செலுத்த திருச்சி அரசு மருத்துவமனை டீன் ஆலோசனை

பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க மக்கள் கைகுலுக்குவதை விட்டுவிட்டு தமிழ் முறைப்படி வணக்கம் செலுத்துமாறு திருச்சி அரசு மருத்துவமனை டீன் அனிதா அறிவுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் பலியானதாக செய்தி பரவி...