​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, உச்சநீதிமன்றம், ஜனநாயகத்தை காத்திடும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, முதலமைச்சரைப் போன்று தாமும் வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலை...

வரும் 8ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 8ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 8ம் தேதி...

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் என்றும், அதில், ஆளும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி, மாபெரும் வெற்றிப்பெறும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில், கட்சி...

பாஜக மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி அரசகுமார் திமுகவில் இணைந்தார்...

பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி அரசகுமார் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய அரசகுமார், விரைவில் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று கூறியிருந்தார். மேலும் ஸ்டாலினையும் அவர் புகழ்ந்து...

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட நிர்பயா நிதியின் மூலம் அனுமதிக்கப்பட்ட 190...

பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டின் 16 முக்கிய பிரச்சினைகளை பட்டியலிட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த 9 பக்க கடிதத்தை, திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வழங்கினர். அதில், மாநில...

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர்

மேட்டுப்பாளையத்தில் மழையின் காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், நடூர் கிராமத்தில் 3...

மேட்டுப்பாளையம் விபத்துக்கு காரணமானவர்கள் கைது செய்யப்படவேண்டும் - ஸ்டாலின்

மேட்டுப்பாளையத்தில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்ற மு.க. ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்....

17 உயிரை காவு வாங்கிய கருங்கல் சுவர்..! கட்டுமான கோளாறு விபரீதம்

மேட்டுபாளையத்தில் 17 பேர் உயிரிழப்புக்கு காரணமான தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த இடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிடுகிறார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஏ.டி காலனியில் சக்கரவர்த்தி ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணி என்பவரது பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டின்...

மு.க. ஸ்டாலினை புகழ்ந்து பேசிய அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக தலைமைக்கு கடிதம்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அரசகுமார், மு.க. ஸ்டாலின்...