​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தீபாவளியை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன் பதிவை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

தீபாவளியை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன் பதிவை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.  தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்து 567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை 3 ஆம்...

தீபாவளி சிறப்பு பேருந்துகள் முன்பதிவு இன்று தொடங்குகிறது

சென்னையில் தீபாவளிப் பண்டிகைக்காக, இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன் பதிவு இன்று தொடங்குகிறது. தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக, 20 ஆயிரத்து 567 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நவம்பர் 3,...

தீபாவளியை முன்னிட்டு, சென்னையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

தீபாவளியை முன்னிட்டு, சென்னையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு இடங்களில் இருந்து, வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.  சென்னை போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, மாநகரின், 6 வெவ்வேறு இடங்களில் இருந்து,...

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 முதல் 5-ஆம் தேதி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 முதல் 5-ஆம் தேதி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.  பாவளிக்குச் சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஏதுவாக தமிழக போக்குவரத்துத் துறை சிறப்புப் பேருந்து சேவையை அறிவித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குச்...

போதை மாத்திரை கேட்டு, மருந்துக்கடையை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது

சென்னை அருகே போதை மாத்திரை கேட்டு, மருந்துக்கடையை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்ட 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். படப்பை பேருந்து நிலையம் அருகே சரவணன் என்பவரது மருந்துக்கடையில், இளைஞர்கள் சிலர் தூக்க மாத்திரை கேட்டு தொல்லை அளித்து வந்துள்ளனர். மருத்துவரின்...

டிசம்பர் மாதத்தில் இயக்கப்படவுள்ள 60 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்

டிசம்பர் மாதத்தில் இயக்கப்படவுள்ள 60 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பயணிகளின் கூட்டநெரிசலை சமாளிக்கும் வகையில் வரும் டிசம்பர் மாதத்தில், சென்னையில் இருந்து செங்கோட்டை, திருநெல்வேலி, நாகர்கோவில், எர்ணாகுளம், சந்திரகாசி, அஹமதாபாத் போன்ற இடங்களுக்கும், புதுச்சேரியில் இருந்து...

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல 20 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்...

தீபாவளிப் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும், இவற்றுக்கான முன்பதிவு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம்...

கைப்பையில் வைத்திருந்த 3இலட்ச ரூபாய் களவுபோனதாக புகார்

மன்னார்குடி - சென்னை விரைவு ரயிலில் வந்த பயணி கைப்பையில் வைத்திருந்த 3இலட்ச ரூபாய் பணம் திருட்டுப் போனது குறித்து ரயில்வே காவல்துறையில் புகார் அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த பானு என்பவர் மன்னை விரைவு ரயிலில் வந்துகொண்டிருந்தார். இன்று காலை...

செங்கல்பட்டில் முதியவரை மிரட்டி காசோலையை பறித்து சென்ற வழக்கில் ஆய்வாளர் தாம்சனின் முன் ஜாமின் மனு தள்ளுபடி

முதியவரை மிரட்டி காசோலையை பறித்து சென்ற வழக்கில் சிக்கிய ஆய்வாளர் தாம்சனின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்து  செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூரை சேர்ந்த முத்தய்யா என்பவரின் வீட்டிற்கு கடந்த 29ந் தேதி வந்த ஆய்வாளர்...

சென்னை தேவாலயத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு, தாம்பரத்தைச் சேர்ந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை....

சென்னை பள்ளிக்கரணையில் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை தாம்பரம் அருகே மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆண்டனி சார்லஸ் - மீரா தம்பதிக்கு, பெர்லின் பிரின்சி என்ற...