​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கதவணை நீர் மின் நிலைய ஷட்டர் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே கதவணை நீர் மின் நிலையத்தில் ஷட்டர் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேட்டூர் அணையில் இருந்து செல்லும் காவிரி ஆற்றில் செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, குதிரைகல்மேடு, ஊராட்சிக்கோட்டை, சமயசங்கிலி, வெண்டிபாளையம் ஆகிய கதவணைகளில் தண்ணீர் தேக்கி, தலா 15...

செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் - நோய்கள் பரவும் அபாயம்

புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள கனகன் ஏரியில் ஏராளமான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசிவரும் நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக் கழிவுகள் ஏரியில் கலப்பதே அதற்கு காரணம் என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த ஏரி ஏற்கனவே உரிய பராமரிப்பு இன்றி புதர்மண்டி, ஆகாய தாமரைகள்...

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம், தென்மேற்கு பருவக் காற்றால், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. தெற்கு ஆந்திர கடற்கரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனாலும்,...

அஜீத் பாடலை மெச்சிய அமைச்சர்..! தாமரைக்கு பாராட்டு

 நடிகர் அஜீத்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் மூலமாக, வழக்கொழிந்த தமிழ் சொற்களை பாடலாசிரியர் தாமரை மீட்டெடுத்துள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டியுள்ளார் சென்னை எத்திராஜ் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் அகராதி விழிப்புணர்வு கருத்தரங்கம் அமைச்சர் மாஃபா...

கடுமையான உழைப்பும், ஒழுக்கமும் இருந்தால் மாணவர்கள் லட்சியத்தை அடையலாம்..!

மாணவர்களிடையே கடுமையான உழைப்பும், ஒழுக்கமும் இருந்தால் தான் லட்சியத்தை அடைய முடியும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைகழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால்...

சென்னையில் அதிகாலையில் பரவலாக மழை....

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மழை பெய்ததால், குளிர்ச்சியான சூழல் நிலவியது. சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்த நிலையில், கோயம்பேடு,வடபழனி,கிண்டி, தாம்பரம்,பாரிமுனை, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மிதமான...

சென்னை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நல்ல மழை

சென்னை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல  மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. தொடரும் மழையால் பல ஊர்களில் நீர்நிலைகள் நிரம்பத் தொடங்கி உள்ளன. சென்னை சென்னையில் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. தேனி  தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும்...

“வீரத் தம்பதி” வீட்டில் நடந்த கொள்ளை.. நீடிக்கும் குழப்பங்கள்

நெல்லை கடையம் பகுதியைச் சேர்ந்த முதிய தம்பதி வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவத்தின் விசாரணையில் குழப்பம் நீடித்து வருகிறது.  கல்யாணிபுரத்தில் பண்ணை வீட்டில் தங்கியிருந்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதியை கடந்த 11ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் சிலர் தாக்கி...

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு..!

வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம், புதுவையின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு ...

இந்தியாவின் 73வது சுதந்திர தினத்தையொட்டி கூகுளில் சிறப்பு டூடுள்

இந்தியாவின் 73வது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டின் பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் வகையில் கூகுளின் முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுள் வெளியிடப்பட்டுள்ளது. டென்மார்க்கில் வசித்து வரும் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஷைவாலினி குமார் என்ற கலைஞர் இந்த டூடுளை வடிவமைத்துள்ளார். அதில் நாடாளுமன்ற கட்டிடம், புலி,...