​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சதுரங்க வேட்டை 2 பட சம்பள பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கு சமரச தீர்வு மையத்திற்கு மாற்றம்

சதுரங்க வேட்டை 2 பட சம்பள பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரவிந்த்சாமி, திரிஷாவின் நடிப்பில்,  இயக்குநரும் நடிகருமான மனோபாலா தயாரித்துள்ள படம் சதுரங்க வேட்டை 2. இந்த...

"நோட்டா" படத்தில் வசனம் எழுதியதற்கு பணம் தரவில்லை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது புகார்

திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது தெலுங்கு வசனகர்த்தா ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து தமிழிலும் தெலுங்கிலும் வெளியாக உள்ள படம் "நோட்டா". இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்....

சக நடிகர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் : ராதிகா ஆப்தே

திரைப்படத்தில் தம்முடன் நடித்த ஒருவர், தம்மை  பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக பிரபல நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில், சமூகவலைதளங்களில் MeeToo என்ற ஹேஷ்டேக்...

வடிவேலுவுக்கு வாய் சரியில்லை, விழுந்தது ரெட் கார்டு

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்திற்கு 8 கோடி ரூபாய் செலவழிக்க செய்து விட்டு, நடிக்க மறுத்து வரும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு புதிய படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது நகைச்சுவை நடிகர் வடிவேலுவை கதாநாயகன் என்ற...

சினிமா தயாரிப்பாளர் குறித்து சர்ச்சை கருத்து..! பணிந்தார் சந்தோஷ் சிவன்

சினிமா தயாரிப்பாளர்கள், படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஊதியம் கொடுக்கும் போது நாய் போல குரைப்பதாகவும், நடிகைகளுக்கு ஊதியம் கொடுக்கும் போது செல்லபிராணி போல கொஞ்சுவதாவும் உருவகப்படுத்தி பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சைகளை கிளப்பி...

அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் வெய்ன்ஸ்டெய்ன் எல்லை மீறி நடந்து கொள்ளும் வீடியோ ஆதாரம் வெளியீடு

அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டெய்னின் பாலியல் அத்துமீறலை மெலிசா தாம்ப்சன் எனும் பெண் வீடியோ மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். 2011ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த சந்திப்பின் போது வெய்ன்ஸ்டெய்ன் தன்னிடம் எல்லை மீறியதாக மெலிசா தாம்ப்சன் புகார் கூறி இருந்தார். இந்த நிலையில்...

சொந்த படத்தால் நஷ்டம் நான் சாகபோகிறேன்..! சினிமா இயக்குனர் உருக்கம்

விஜயகாந்த் நடித்த பூந்தோட்ட காவல் காவல்காரன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களின் இயக்குனரான செந்தில் நாதன், சொந்தபடம் எடுத்து நஷ்டமானதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதால் அவரை தேடி வருகின்றனர் எம்.ஜி. ஆர் அடித்த நம் நாடு படத்தின்...

எளிதில் தண்ணீரில் கரைந்து எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 13ம் தேதி நாடு முழுவதும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு ஈரோடு மாவட்ட இந்து முன்னணியின் சார்பில் மாவட்டம் முழுவதும் ஆயிரத்தெட்டு சிலைகள் நிறுவி வழிபாடு செய்ய முடிவு செய்து அனைத்து வகை சிலைகளுக்கும்...

"ரெட்டி டைரி" படத்தில் தம்முடன் திரைப்பட பிரபலங்கள் நெருக்கமாக இருந்த போது எடுத்த காட்சிகள் இடம்பெறும் : ஸ்ரீரெட்டி

திரைப்பட பிரபலங்கள் தம்முடன் நெருக்கமாக இருந்தபோது ரகசிய கேமராவால் எடுக்கப்பட்ட காட்சிகள் தம்மிடம் இருப்பதாக கூறியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி, அந்த காட்சிகள் அனைத்தும், தமது புதிய படத்தில் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாகக் கூறி, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட...

கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை நினைத்து கூட பார்க்க முடியவில்லை - ரஜினிகாந்த்

மறைந்த திமுக தலைவர் கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் ஃபெப்சி அமைப்பின் சார்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை...