​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லக் கூடாது மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி சுற்றுலா செல்ல கூடாது என மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் புனேவுக்கு சுற்றுலா சென்றபோது 3 பேர் நீர்நிலையில் மூழ்கி பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து மெட்ரிக் பள்ளிகளுக்கு தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள்...

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கொள்ளை தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் 6 லட்ச ரூபாய் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு நேற்று...

பாலாற்றின் குறுக்கே ஆந்திராவின் அணை - பேச்சுவார்த்தை தோல்வி

பாலாற்றின் குறுக்கே, அணை கட்டியே தீருவோம் என ஆந்திர பிடிவாதம் பிடிப்பதால், டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. சித்தூர் மாவட்டம் பெரும்பள்ளம், கணேசபுரம் ஆகிய பகுதிகளில் தடுப்பணையின் உயரத்தை 50 கோடி ரூபாய் செலவில் 5 அடியில் இருந்து 12 அடியாக...

தனியார் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து தப்பிய 5 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு

மன்னார்குடியில் தனியார் வங்கியில் துப்பாக்கி முனையில் 6 லட்ச ரூபாய் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையடித்து தப்பிய 5 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து திரும்பக்கோட்டை செல்லும் சாலையில் 10 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் கீழ்தளத்தில்...

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ. 6 லட்சம் பணம் நகை கொள்ளை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பட்டப்பகலில் நுழைந்த கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் 6 லட்ச ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.  அசேஷம் ஊராட்சியில் இயங்கிவரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்குள் மதியம் 3 மணியளவில்...

நிர்வாகத்திற்கு இடையூறு செய்வோருக்கு துணைபோக வேண்டாம் என அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

ஜாக்டோ ஜியோ நாளை போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் தவிர்த்து, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, மீன்வளம், பணியாளர், நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின்...

இன்றும், நாளையும் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு - தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

13 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும், பல்வேறு இடங்களில் புழுதிப் புயல் தாக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த வாரத்தில்...

ரயில்வேக்குக் கையகப்படுத்திப் பயனின்றிக் கிடக்கும் 12,066ஏக்கர் நிலத்தை விற்க ரயில்வே திட்டம்

ரயில்வேக்குச் சொந்தமான 12ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்பது அல்லது மாற்றிக் கொள்வது குறித்து மாநிலத் தலைமைச் செயலாளருக்கு ரயில்வே வாரியம் கடிதம் எழுதியுள்ளது. மீட்டர் பாதை, குறுகிய பாதை ஆகியவற்றை அகலப்பாதை ஆக்குவதற்குப் பல்வேறு மாநிலங்களில்  நிலம் எடுக்கப்பட்டது. மேற்கு வங்கம், குஜராத்,...

எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி

எர்ணாகுளத்தில் மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் மாவட்டம் விளக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், தமது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வுக்காக எர்ணாகுளம்...

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால்தான் வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு - மத்திய அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் இதர மாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போதும், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை...