​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி நதிநீர் பங்கீடு வரைவுத் திட்டம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி வரைவு செயல்திட்ட அறிக்கை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.  உச்சநீதிமன்றத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை,...

5 பேர் கொண்ட தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு என்ற புதிய அமைப்பு

5 பேர் கொண்ட தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு என்ற புதிய அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. அணைகளில் உள்ள நீரின் அளவை கண்காணித்தல், புதிய திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும். பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால்...

வேளாண் படிப்புகளுக்கு இனி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு - தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவிப்பு

வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு, ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கோவையில் இயங்கும் வேளாண் பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளும், 4 தொழில்முறை பாடப்பிரிவுகளும் உள்ளன. உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைப்பு கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 6,569...

Flipkart மூலம் இந்திய சந்தையில் காலூன்ற வால்மார்ட் முயற்சி - தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் குற்றச்சாட்டு

ஃபிளிப்கார்ட் நிறுவன பங்குகளை வாங்கி இந்திய சந்தையில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் காலூன்ற முயற்சிப்பதாக, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்திய சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தே, ஃபிளிப்கார்ட் நிறுவன பங்குகளை...

கோடை விடுமுறை..! சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்..!

கோடை விடுமுறை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் மக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் திரண்டுள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், விடுமுறையைக் கழிக்கவும் கோடைவாசஸ்தலங்களில் முகாமிட்டு வருகின்றனர். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இன்று கடற்கரையில் கூட்டம் அதிக அளவில்...

மன்னார்குடி டி.எம்.பி வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த 4 பேர் கைது-ரொக்கப்பணம் மற்றும் துப்பாக்கி பறிமுதல்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மெர்கண்டைல் வங்கிக் கொள்ளை சம்பவத்தில், வங்கி ஊழியர் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக் கிளைக்கு, கடந்த 7 ஆம் தேதியன்று துப்பாக்கிகளுடன் வந்த, 5 பேர் கொண்ட கும்பல்,...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என தேசிய வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள தேசிய வானிலை ஆய்வு மையம், நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குமென தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள தேசிய வானிலை ஆய்வு...

பெண் செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை வெளியிட்ட எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் - மா.கம்யூனிஸ்ட்

பெண் செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை வெளியிட்ட பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்யுமாறு, தமிழ்நாடு அரசை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தின்போதும்,...

TMB வங்கியில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மணப்பாறை TMB வங்கி ஊழியரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மணப்பாறையை சேர்ந்த அந்த வங்கியின் ஊழியர் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மன்னார்குடியை அடுத்துள்ள அசேஷம் கிளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்...

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிட கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில், சந்தானம் குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிடக் கூடாது என்றும், அந்த அறிக்கையின் மீது மேல் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என்றும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தொடர்ந்திருந்த புரட்சிகர...