​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கல்லூரி மாணவர் நலனுக்கான திட்டங்கள் உள்பட 19 புதிய அறிவிப்புக்கள் வெளியீடு

கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவியர் நலனுக்கான திட்டங்கள் உள்பட 19 புதிய அறிவிப்புக்கள் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளன. அமைச்சர் வளர்மதி இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவியர் நலனுக்காக...

உடலுறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல்

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக, தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  சென்னையில், இந்திய மருத்துவ சங்க விழா நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய அமைச்சர்...

டெல்லியில் இன்று நடக்கிறது காவிரி ஆணையக் கூட்டம்..! தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்குமுறை குழுவையும் அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, இந்த 2  அமைப்புகளையும் மத்திய அரசு அண்மையில் அமைத்தது.  காவிரி மேலாண்மை நீர் ஆணையத்தின் இடைக்கால தலைவராக...

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் சார்பில் விருது வழங்கும் விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது...

மீன்வளப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்பிற்கு 2 ஆயிரத்து 956 விண்ணப்பங்களும், இளநிலை மீன்வளப் பொறியியல் படிப்பிற்கு 929 விண்ணப்பங்களும், இளநிலை உயிர் தொழில்நுட்பவியல் படிப்பிற்கு 527...

தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில்  காற்றின் வேகம் அதிகம் இருப்பதால், அந்த பகுதிகளில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு...

கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறை - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 1 முதல், 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் 3 வேகத் தடைகள், மற்றும் 3 திருப்பங்களில் எரிபொருள் சிக்கனத்துடன்...

தமிழ்நாடு பார் கவுன்சிலில் முதல் முறையாக திருநங்கை வழக்கறிஞராக பதிவு

தமிழ்நாடு பார் கவுன்சிலில் முதல் முறையாக சத்யஸ்ரீ சர்மிளா என்ற திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யஸ்ரீ சர்மிளா, பெற்றோர் மற்றும் திருநங்கை அமைப்புகளின் உதவியுடன் தாம் சேலம் கல்லூரியில் சேர்ந்து சட்டப்படிப்பை முடித்ததாக தெரிவித்துள்ளார். பிரித்திகா...

மணப்பாறை வங்கி லாக்கர் அறையில் இருந்த இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல்

மன்னார்குடி வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய மணப்பாறை வங்கி ஊழியர் பணிபுரிந்த வங்கியில் இருந்து இரண்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மன்னார்குடியை அடுத்த அசேஷம் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் அண்மையில் 6 லட்சம்  ரூபாய் மற்றும் 3 லட்சம் ரூபாய்...

தமிழ்நாட்டில் 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில், ஐ.ஜி மற்றும் ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி  அசோக்குமார் தாஸ், ஏ.டி.ஜி.பி பதவி உயர்த்தப்பட்டு, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு...