​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை

கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி, மின்துறைக்கு கடன் இருந்தாலும், தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என தெரிவித்துள்ளார். சென்னை - அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய...

பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீரை கொட்டும் லாரிகள் மிது நடவடிக்கை

சென்னையில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீரை விடும் லாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க குழு அமைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது. சோழிங்கநல்லூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து கழிவுநீரை எடுத்து செல்லும் லாரிகள் பக்கிங்ஹாம் கால்வாயில்...

சரக்கும் மிடுக்குமாய் திரெளபதி தரிசனம்..! போலி வக்கீல்கள் மீது சாடல்

நாடகக் காதலை விமர்சிப்பதாக கூறி வெளியாகி உள்ள திரெளபதி படத்தில், திருப்பதியில் உள்ள சட்டகல்லூரிகளில் போலியாக சான்றிதழ் பெற்ற வடசென்னை வழக்கறிஞர்கள் சிலர், 3200 பதிவுத் திருமண மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். உண்மை கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படும் திரெளபதி படம் தமிழ்நாடு...

போலி படிப்புகளை கற்பிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

போலி படிப்புகளை கற்பிக்கும் நிறுவனங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. துறையின் கீழ் உள்ள நிறுவனத்தில் எலக்ட்ரோபதி, எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்பு முடித்து சிகிச்சை அளிக்கும் உரிமையில், தமிழ்நாடு ஹோமியோபதி...

முன்னாள் பாமக பிரமுகர் கொலை வழக்கு - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர், துணைத் தலைவர் ஆஜர்

முன்னாள் பாமக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் மற்றும் துணைத் தலைவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பகோணம் அடுத்த திருபுவனத்தை சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர்...

அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட மாவட்ட ஆட்சியர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.  இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் மாவட்ட...

கோழி இறைச்சியுடன் கொரோனாவை இணைத்து வதந்தி என புகார்- முதலமைச்சரிடம் மனு

கொரோனா வைரஸ் பரவுவதால் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை சாப்பிட வேண்டாம் என சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சரிடம் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சம்மேளத்தினர் மனு அளித்தனர். நாமக்கல்லுக்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு...

ஹோமியோபதி கல்வி நிறுவனம் போலியாக நடத்திய 3 பேர் கைது

போலி ஹோமியோபதி கல்வி நிறுவனம் நடத்தி போலிச் சான்றிதழ் வழங்கியதாக முன்னாள் விமானப்படை அதிகாரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஹோமியோபதி கல்வி நிறுவனம் நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாக, தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி பதிவாளர் ஆவுடையப்பன் அளித்த...

"அதிமுக அரசை ஒருபோதும் திமுகவால் குறை கூற முடியாது"

அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களில் குறைகள் உள்ளதாக திமுகவால் ஒருபோதும் கூற முடியாது என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், 47,072 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய முதலமைச்சர்,...

மோசமான சாலைகள் காரணமாக விபத்து.. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு எச்சரிக்கை..!

மோசமான சாலைகள் காரணமாக ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும் பொறுப்பாக்க வேண்டிவரும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின்...