​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

SSI வில்சனைக் கொல்லப் பயன்டுத்திய கத்தி மீட்பு..!

எஸ்.ஐ. வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி திருவனந்தபுரம் அருகே கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை விற்றது யார் என்பது குறித்தும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில்...

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது இந்தியாவுக்கு ஆபத்து - இலங்கை முன்னாள் எம்.பி

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது இந்தியாவுக்கு ஆபத்து என இலங்கை முன்னாள் எம்.பி. சிவாஜி லிங்கம் கூறியுள்ளார். உடல்நல பரிசோதனைக்காக தமிழகம் வந்துள்ள அவர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் நினைவிடங்களில், அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை...

வேலம்மாள் கல்விக் குழுமம் - கணக்கில் காட்டாத ரூ.2 கோடி ரொக்கம், ரூ.400 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு

வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், 2 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலம்மாள் கல்வி குழுமத்தில் தொடர்ந்து நன்கொடை பெறப்படுவது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,...

நதிநீர் பிரச்சனை குறித்து பேச கேரள முதலமைச்சர் சென்னை வர உள்ளார் - அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்

நதிநீர் பிரச்சனை தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விரைவில் தமிழகம் வந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க  உள்ளதாக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கேசி கருப்பணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விருந்தினர் மாளிகை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ள...

அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகால வளர்ச்சி: உள்ளாட்சித் துறை அமைச்சர்

அதிமுக அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழகம் கடந்த 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகால வளர்ச்சி அடைந்திருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் வெள்ளலூரில் 168 கோடி ரூபாய் மதிப்பில் 61.62 ஏக்கரில் பிரமாண்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது....

சமூக வலைத்தளங்களில் ஆபாசம், அவதூறு கருத்துகளை பரப்புபவர்களின் பட்டியலை தயார் செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவு செய்வோரின் பட்டியலை சேகரித்து அறிக்கை அளிக்க சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஒருவர் குறித்து சமூக வலைதளத்தில் ஆபாசமாக கருத்து பதிவிட்ட சென்னையை சேர்ந்த மருதாசலம் என்பவரை, சைபர் கிரைம்...

மூட்டுவலிக்கு விஷத்தை விற்கும் கொடைக்கானல் கடைகள்..! மருத்துவர்கள் எச்சரிக்கை

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளிடம் மூட்டுவலி தைலம் என்று தடைசெய்யப்பட்ட கொடிய விஷத்தை நிறம் மாற்றி விற்றுவருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  இயற்கை எழில் கொஞ்சும் , மலைகளின் இளவரசியாக வர்ணிக்கப்படும் கொடைக்கானல் தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக...

பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி ஊதியத்தை நிர்ணயித்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படும்...

தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. இதன் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு...

தமிழகம் முழுவதும் 1,706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரத்து

தமிழகம் முழுவதுமுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆயிரத்து 706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாமல் உபரியாக உள்ள காலிப் பணியிடங்களின் விவரங்களை அனுப்புமாறு...