​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழக அரசு மத்திய அரசோடு இணைந்து, முதலமைச்சரின் விரிவான...

பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய அரசாணையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோவை மாநகராட்சியுடன் கூடுதலாக சேர்க்கப்படும் பகுதிகளுக்கு  பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக 740 கோடி ரூபாய்...

தமிழகத்தில் புதிய வாகன மாடல்கள் விற்பனை - மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

தமிழகத்தில் புதிய வாகன மாடல்களை விற்பனை செய்ய போக்குவரத்து ஆணையரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய இரு, 4 மற்றும் கனரக வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும்போது ...

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வருகிறது கிருஷ்ணா நதி நீர்

கிருஷ்ணா நதியின் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு வருகிற  24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் பூண்டி நீர்தேக்கத்திற்கு இந்த நீர் வந்தடையும். பல மாதங்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் சென்னை மக்களுக்கு...

கோவில் நில ஆக்கிரமிப்பு - தமிழக அரசு உறுதி

கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணையின் கீழ் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்தால் பட்டா வழங்கப்படும் என...

தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என சமூக வலைதள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது

தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என்று சமூக வலைதள நிறுவனங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள  முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபின்...

தமிழ் காப்பு போராட்டம் நடத்த இளைஞர்கள் சொற்படை வீரர்களாக தயாராக வேண்டும் - அமைச்சர்

இந்தி எதிர்ப்பு போராட்டம் போல தமிழ் காப்பு போராட்டம் நடத்த இளைஞர்கள் சொற்படை வீரர்களாக தயாராக வேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் 18 ஆவது தமிழ் இணைய மாநாட்டின் துவக்க விழாவில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன்,...

பல்வேறு துறைகளின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் நலத்திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு துறைகளின் சார்பில்  கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் நலத்திட்டங்களை நேற்று  தொடங்கி வைத்தார். தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பன்னாட்டு மயமாக்கவும், வெளிநாட்டு ஒத்துழைப்பை பெறவும், முதலீட்டை ஈர்க்கவும், "குறு, சிறு...

முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்குதலை துரிதப்படுத்த குழு

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்குதலை துரிதப்படுத்தவும், வசதிகளை மேம்படுத்தவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் மூலம், 8,835 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு, 41...

GST வரி குறைப்பு தொடர்பாக ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்துவோம் -அமைச்சர்

தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் 34 பொருட்களுக்கு GST வரி குறைக்கப்பட்டுள்ளது என்றும் மேலும்  64 பொருட்களுக்கு வரி குறைப்பு தொடர்பாக ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்துவோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கோவாவில் வெள்ளிக்கிழமை நடைபெறும் 37வது ஜிஎஸ்டி...