​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பாக அரசாணை உருவாக்க குழு அமைக்கப்பட உள்ளது - எஸ்.பி.வேலுமணி

நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை திருத்தம் செய்யக்கோரி, தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் அரசாணையை உருவாக்க குழு அமைக்கப்பட உள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில்...

கச்சா எண்ணெய்க்கு டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பெற்றுக் கொள்ள முன் வர வேண்டும், எண்ணெய் வள நாடுகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பெற்றுக் கொண்டு கச்சா எண்ணெயை விற்பனை செய்ய எண்ணெய் வள நாடுகள் முன்வர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.  இந்தியா மற்றும் அயல் நாடுகளைச் சேர்ந்த எண்ணெய் மற்றும்  எரிவாயுத் துறையிலுள்ள  அமைச்சர்கள், தலைமை...

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை ஊழலுக்கு உடந்தையாக இருப்பதாக நாராயணசாமி குற்றச்சாட்டு, புகாருக்கு கிரண்பேடி திட்டவட்டமாக மறுப்பு.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை ஊழலுக்கு உடந்தையாக இருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி கூறிய குற்றச்சாட்டை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.  புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிவோர், தொழில் நிறுவனங்களிடம்...

சென்னையில், நவீன கண்காணிப்பு கேமராக்களின் செயலாக்கம் குறித்து காவல்துறையினருக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் விளக்கம்

சென்னையில், நவீன கண்காணிப்பு கேமராக்களின் செயலாக்கம் குறித்து காவல்துறையினருக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. சென்னை காமராஜர் சாலையில் 12 அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி ஈவெரா பெரியார் சாலையில் மூன்று தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் போக்குவரத்து இணை...

வங்கி, சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயம் ஆகிறதா? - அருண் ஜேட்லி சூசகம்

வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டுகள் வாங்க ஆதார் மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்துள்ளார். ஆதார் அட்டை கட்டாயம் என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. ஆனால் ஆதார் எண்ணை தனியார் நிறுவனங்கள்...

உபேர், ஓலா டாக்சி சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் உரிமம் ரத்து: கிரண்பேடி

புதுச்சேரியில் ஓலா, உபேர் டாக்சிகளை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், ஆட்டோ ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் ஓலா, உபேர் டாக்சிகளை அறிமுகப்படுத்துவதற்கு அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக துணை நிலை ஆளுநரிடம்...

MGR நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் கிண்டியில் உள்ள அலுவலகத்தில் நடத்தப்பட்டு வரும் இந்த பிரம்மாண்டமான முகாமில், 30-க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. தங்கள் நிறுவனங்களில் காலியாக உள்ள ஆயிரத்துக்கும்...

ஆதார் விவரங்களை நீக்குவது மிகக் கடினம் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து

செல்பேசி எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆதார் விவரங்களை நீக்குவது மிகக் கடினம் எனக் கூறப்படுகிறது. ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தனியார் நிறுவனங்கள் ஆதாரைக் கேட்டுப் பெறக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செல்பேசி எண்ணுடன் ஆதாரை இணைக்கச் சொல்லக்...

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தனியார் நிறுவனங்கள் ஆதார் கேட்கக் கூடாது

வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் ஆதாரை இணைத்திருந்தால் ஆதார் தரவுகளை அழித்துவிடுமாறு பொதுமக்கள் கோர முடியும். ஆதார் வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், வாடிக்கையாளர் விவரங்கள் சரிபார்ப்புக்காக ஆதார் தரவுகளைத் தனியார் நிறுவனங்கள் பெறுவதற்கு வகை செய்யும் ஆதார் சட்டத்தின் 57ஆவது பிரிவை...

வடசென்னையில் குற்றங்களைக் களைய தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - காவல் இணை ஆணையர் பிரேமானந்த் சின்கா

வடசென்னையில் குற்றங்களைக் களைய தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல் இணை ஆணையர் பிரேமானந்த் சின்கா கேட்டுக் கொண்டார். சென்னையில் கண்காணிக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் சிசிவிடி கேமராக்களை பொருத்த, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி, வடசென்னை...