​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாட்டின் மின்சாரத் தேவை 13.2 விழுக்காடு அளவிற்கு சரிவு

நாட்டின் மின்சார தேவை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவாக, வீழ்ச்சியடைந்திருப்பதாக, ஆய்வறிக்கை ஒன்றில், தகவல் வெளியாகியிருக்கிறது. 5 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் , அண்மை மாதங்களாக, வாகன உற்பத்தி, கட்டுமானத்துறை உட்பட...

மின்சாரத்தில் இயங்கும் விமானத்தை உருவாக்கும் பணியில் நாசா தீவிரம்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மின்சாரத்தில் இயங்கும் சிறிய ரக விமானத்தை உருவாக்கி வருகிறது. எக்ஸ்.57 மேக்ஸ்வெல் எனப்படும் அந்த விமானம், இரட்டை என்ஜின் விமான தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. 2015ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு வரம் இந்த...

பிகில் டிக்கெட் இலவசம்..! ரசிகர்களுக்கு சத்திய சோதனை

நடிகர் விஜய்யின் பிகில் படத்திற்கான டிக்கெட்டை இலவசமாக தரப்போவதாக சில தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளது, சர்க்கார் படத்திற்கு பின்னர் இலவசத்தை எதிர்த்து வரும் விஜய் ரசிகர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது... வீட்டில் சாப்பாட்டில் சிறு கல் கிடந்தாலே கொந்தளிக்கும் இவர்கள், நடிகர் விஜய்யின்...

ஏழைகள் கைகளில் பணத்தை தாருங்கள் - அபிஜித் பானர்ஜி

வேலைவாய்ப்பின்மையை யாருமே விரும்பாத நிலையில், தனியார் நிறுவனங்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று நோபல் விருது பெற்ற அறிஞர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். ஒரு இயந்திரம் மலிவான செலவில் வேலை செய்யும் என்றால் ஊழியரை வீட்டுக்கு அனுப்ப அந்த நிறுவனம் யோசிக்கவே...

அரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது

அரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் காலமானபோது, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜூலை 30ஆம் தேதி தமிழ்நாடு அரசு பொது...

கொசுப்புழுக்கள் உருவாவதற்கான காரணிகள் தென்பட்டால் அபராதம் விதிக்கப்படும் - சுகாதாரத்துறை

டெங்கு ஒழிப்பு குறித்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளும்போது, கொசுப்புழுக்கள் உருவாவதற்கான காரணிகள் தென்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை டெங்கு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி, சுகாதாரத்துறை இயக்குநகரகம் மூலம்...

புரத சத்திற்காக சிக்கன் சாப்பிடுமாறு தமது மகள் கூறியது சரிதான்.. ஆர்.எஸ்.எஸ் விழாவில் ஷிவ் நாடார் பேச்சு

உத்திரப்பிரதேசத்தில், ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்க, தமது மகள் செய்த செயல், தன்னளவில் சரிதான் என்றாலும், அது தங்களுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம் என, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற, HCL நிறுவனர் ஷிவ் நாடார் தெரிவித்திருக்கிறார். மகராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை...

தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி எந்த நாட்டிலிருந்தும் ரயில்களை வாங்கலாம் - மத்திய அரசு அனுமதி

50 ரயில் வழித்தடங்களில் ரயில்களை இயக்க முன்வரும் தனியார் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தங்களுக்கு விருப்பமான ரயில்களை வாங்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் 2021ம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு டெல்லி - மும்பை, டெல்லி - ஹௌரா உள்ளிட்ட...

அதிமுகவுடன் அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும்- ராமதாஸ்

பருவநிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு மேலும் தீவிரம் காட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வாயிலில் காலநிலை அவசரநிலை பிரகடனம் செய்ய வலியுறுத்தி பாமக மற்றும் பசுமை தாயகம் சார்பில்...

பிளாஸ்டிக் - மாநில அரசுகளுக்கு கெடு..!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பைகளின் உற்பத்தியை நிறுத்த அக்டோபர் 2ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை...