​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இளம்பெண்ணிடம் தந்தை ஸ்தானத்தில் பழகி, மயக்க மருந்து கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவன் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தந்தையை இழந்த இளம்பெண்ணிடம் தந்தை ஸ்தானத்தில் பழகி, மயக்க மருந்து கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவனை காவல்துறையினர் கைது செய்த நிலையில், மற்றவர்களையும் கைது செய்யக்கோரி பெண்ணின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை...

குரூப் 2 வினாத்தாளில் தந்தை பெரியாருக்கு சாதி அடையாளம் இடம்பெறக் காரணமானவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்

குரூப் 2 வினாத்தாளில் தந்தை பெரியாருக்கு சாதி அடையாளம் இடம்பெறக்  காரணமானவர்களை பணி நீக்கம் செய்வதோடு, தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு இ.வெ. ராமசாமி நாயக்கர்,...

TNPSC குரூப் 2 தேர்வின் வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயர் சாதி பெயருடன் அச்சிடப்பட்டதால் சர்ச்சை

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின்  வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயர் சாதி பெயருடன் அச்சிடப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு   தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. பொது அறிவுப் பிரிவில் "திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?" என்ற...

மதுரையில் ஒரேநாளில் அரங்கேற்றப்பட்ட நான்கு கொலை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்

மதுரையில் ஒரேநாளில் அரங்கேற்றப்பட்ட நான்கு கொலை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். பாலமேட்டை அடுத்த சத்திர வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் மதுரை வீரன். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், மு.க.அழகிரியின் ஆதரவாளர் ஆவார். இன்று காலை  மதுரை வீரன், தனது வீட்டின் முன்...

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை வீடுபுகுந்து தாக்கிய இளைஞர்.... தடுக்க வந்த தம்பியையும் வெட்டிய கொடூரம்

நெல்லை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். களக்காடு அருகே உள்ள ஏர்வாடியை அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகள் பிரியா. 20 வயதான இவர், கல்லூரி படிப்பைத் தொடர்ந்து, வங்கி...

மூளை பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் சிகிச்சைக்கான நிதியுதவி - விவரங்களை தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரிக்கை

மூளை பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு நிதி உதவி அளிக்கும் திட்டங்கள் குறித்த விவரங்களை, வருகிற 29ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு, மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூளை பாதிப்புக்குள்ளான 10 வயது மகனை கருணைக் கொலை செய்யக் கோரி கடலூரைச் சேர்ந்த...

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்ற MLA அசோக் ஆனந்த் 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட தடை

புதுச்சேரியில் வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். சிபிஐ வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, ...

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் தகுதிநீக்கம்

புதுச்சேரியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்றுள்ள, என்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வை தகுதிநீக்கம் செய்து, அம்மாநில சட்டப்பேரவை செயலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தட்டாஞ்சாவாடி தொகுதியின் என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் அசோக் ஆனந்த். இவரது தந்தை ஆனந்த், 2007 - 2008 ஆண்டில்...

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததால் இளைஞர்கள், சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு

தமிழகத்திலேயே முதல் முறையாக, நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக, நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவியில், 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கோவையில் 30 பேர் மீதும், திருப்பூரில் 40 பேர் மீதும் போலீசார் வழக்குப்...

செய்தியாளர் ஜமால் கசோக்கியின் உடலை மதீனாவில் புதைக்க அவரது மகன்கள் விருப்பம்

கொலை செய்யப்பட்ட செய்தியாளர் ஜமால் கசோக்கியின் உடலை மதீனாவில் புதைக்க அவரது மகன்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது மகன்களான சாலா மற்றும் அப்துல்லா ஆகியோர் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தங்கள் தந்தையின் உடலை இஸ்லாமிய முறைப்படி மதீனாவில் உள்ள அல்...