​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உள்ளாட்சித் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை நடத்தியது. சென்னை ராயப்பேட்டையிலுள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பாஜக சார்பில் பொன் ராதா கிருஷ்ணன்,கே.டி. ராகவன், பாமக...

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு துணிப்பையுடன் வருவோருக்கு பரிசு

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபதிருவிழாவுக்கு துணிப்பை, சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வருவதை ஊக்குவிக்க, பரிசாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...

நான் சைவம்.. வெங்காய விலை உயர்வு பற்றியெல்லாம் எனக்கு தெரியாது- மத்திய அமைச்சர்

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தங்கம் விலை உயர்வை விட வெங்காய விலை உயர்வு பற்றி பேசாதவர்களே இல்லை. ஆனால் வெங்காய விலை உயர்வு பற்றி தனக்கு எதுவுவுமே தெரியாது என, மத்திய சுகாதாரம் மற்றும்...

தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து பதக்க வேட்டை

தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது. ஒரேநாளில் 15 தங்கப்பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றனர். 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டுவில் நடந்து வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளை சேர்ந்த 2,700 வீரர்-வீராங்கனைகள்...

ஜெ ஜெயலலிதா என்னும் நான்.. சிம்மக்குரல் மறைந்து உருண்டோடிய மூன்று ஆண்டுகள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்திய அரசியலில் இரும்புப் பெண்மணியாக வலம் வந்த அவரைப் பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு இதோ... ஜெயலலிதாவின் கணீர் குரலைத் தமிழக மக்கள் கேட்டு 3 ஆண்டுகள் உருண்டோடி விட்டன... முன்னணி திரைப்பட...

தங்கத்துக்கு இணையாக தற்போது வெங்காயம்...பாதுகாக்கும் விவசாயிகள்...!

வரலாறு காணாத அளவில் வெங்காய விலை உயர்ந்து வருவதால் தங்க நகைக் கடைகளுக்கு இணையாக வெங்காயச் செடிகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்ட சுவாரஸ்யம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.... வெங்காயம்.... உரிக்க உரிக்க ஒன்றும் இல்லை..! என்பதை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்பட்ட சாதாரண காய்கறி..!...

இந்திய வீரர் வீராங்கனைகள் தெற்காசிய போட்டியில் சாதனை...!

காத்மாண்டுவில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டியின் இரண்டாம் நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 18 தங்கம் உட்பட 43 பதக்கங்களை வென்றுள்ளது. 13வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளம் நாட்டிலுள்ள காத்மாண்டுவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த அர்ச்சனா சுசிந்திரன்...

பாங்காக்கில் இருந்து வந்த பயணியிடமிருந்து தங்கம் பறிமுதல்

பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் கடத்தப்பட்ட 18 லட்சம் ரூபாய் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியை சேர்ந்த சேக் முகமது என்ற பயணியின் உடைமைகளை சோதனையிட்ட போது பெட்டியின் உள்ளேயும் தமது...

மலேசியாவில் இருந்து வந்த பயணியிடம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வந்த பயணியிடம் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த பைஸல் அகமது பின் அஷ்ரப் அலி என்ற பயணியைச் சோதனை செய்தபோது அவரது கால்சட்டையில் மறைத்து...

தேனி டூ மலேசியா சொர்ணாக்கா லவ்..!

முகத்தை பார்க்காமல் மலேசிய பெண்ணுடன் முகநூல் காதலில் விழுந்த தேனி மென்பொறியாளர் ஒருவர், தனது காதலி குண்டாக இருப்பதாக கூறி காதலை முறித்ததால், அவரது கதையை முடிக்க கூலிப்படை ஏவப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி... தேனி மாவட்டம் போடியில்...