​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி குற்றச்சாட்டு கூறுகிறவர்கள், படிப்பறிவே இல்லாதவர்கள்: வி.கே.சிங் கண்டனம்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி குற்றச்சாட்டு கூறுகிறவர்கள், படிப்பறிவே இல்லாதவர்கள் என மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடனான, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டு வருகிறார்....

சிபிஐ சிறப்பு இயக்குனரை கைது செய்ய தடை நீட்டிப்பு

சிபிஐ சிறப்பு இயக்குனரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை, வரும் 28 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேசி தொடர்பான வழக்கில் இருந்து தொழிலதிபர் சதிஷ் சனாவை விடுவிக்க அவரிடம் 2 கோடி ரூபாய்...

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் அசோக் கெலாட் - சச்சின் பைலட் போட்டி

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகிய இருவரும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் மூண்டுள்ளதாக தகவல் வெளியானது....

சபரிமலை விவகாரத்தையும் முத்தலாக்கை இணைத்துப் பேசக் கூடாது - அமித்ஷா

சபரிமலை விவகாரத்தையும் முத்தலாக்கையும் இணைத்துப் பேசக் கூடாது என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷாவிடம் பெண்ணுரிமை விவகாரத்தில் சபரிமலை மற்றும் முத்தலாக் விவகாரத்தில் பா.ஜ.க. இரட்டை நிலை எடுத்திருப்பதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதனை மறுத்த அவர்,...

இந்தியாவில் புதிதாகப் பணியமர்த்தும் விகிதம் 92சதவீதமாக இருக்கும் என தகவல்

இந்தியாவில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் விகிதம் இந்த நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் 92 விழுக்காடாக இருக்கும் என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. வேலைவாய்ப்பு விகிதம் குறித்து டீம்லீஸ் எம்ப்ளாய்மென்ட் அவுட்லுக் நிறுவனம் ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஆட்களைப்...

உலக தாக்கத்தால் சில நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறுகின்றன - ஜாக் டோர்சி

உலகளாவிய தாக்கத்தால், இந்தியாவில் வெளியேற முடிவு செய்யும் நிறுவனங்கள், தொடர்ந்து இயங்குவதற்கு முடிந்தவரை உதவிகளை செய்ய இருப்பதாக, டுவிட்டர் சி.இ.ஓ. தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட டுவிட்டரின் தலைமைச் செயல் அதிகாரியும், இணை நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி, டெல்லி ஐ.ஐ.டி. மாணவர்களிடையே...

டெல்லியில் காற்று மாசு மிக மோசம் என்ற நிலைக்கு மாறியது

டெல்லியில் காற்று மாசு கடுமையான நிலையில் இருந்து மிக மோசமான நிலைக்கு மாறியுள்ளது. தீபாவளிக்குப் பின் காற்று மாசு உச்சத்தை எட்டிய நிலையில், இரவில் சாரல் மழை பெய்ததன் காரணமாக தற்போது சிறிதளவு மட்டும் குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.....

சபரிமலை கோவிலில் பெண்களை வழிபாடு நடத்துவதற்கு அனுமதியளித்த தீர்ப்பை ஜன.22ஆம் தேதி தான் விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம்

சபரிமலை கோவிலில் பெண்களை வழிபாடு நடத்துவதற்கு அனுமதியளித்த தீர்ப்புக்கு எதிரான மனுக்களை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களும் வழிபாடு நடத்தலாம் என...

இணையம் மூலம் வங்கிச் சேவை வழங்கும் அபிக்ஸ் திட்டத்தை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

நிதி தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இந்தியாவே முன்னோடி என்றும், இத்தகைய நிறுவனங்களைத் தொடங்க, இந்தியாவே மிகச்சிறந்த இடம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  சிங்கப்பூரில் நடைபெறும் கிழக்காசிய உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நேற்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்....

மோடி பிரதமராக யார் காரணம் என சசி தரூர் கேள்வி

விண்வெளித் திட்டங்கள், ஐ.ஐ.டி.க்கள் போன்றவற்றை உருவாக்கியதும், அமெரிக்காவின் பிரபல கணினி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தந்ததும் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார். தேநீர் கடை நடத்திய...