​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

குட்கா முறைக்கேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மாதவராவ் என்பவருக்கு சொந்தமான...

சிலை கடத்தல் தடுப்பு தொடர்பான உத்தரவுகளை அமல்படுத்திய விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்த விவரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை...

தமிழ்நாடு அரசின் 46ஆவது தலைமைச் செயலாளராக, கே.சண்முகம் பொறுப்பேற்பு

தமிழ்நாடு அரசின் 46ஆவது தலைமைச் செயலாளராக, கே.சண்முகம் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவுபெற்றது. இதையடுத்து, 2010ஆம் ஆண்டு முதல், திமுக, அதிமுக ஆட்சிகளில் தொடர்ந்து நிதித்துறை செயலாளராக இருந்த, கே.சண்முகம் புதிய...

தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக பதவியேற்றார் திரிபாதி...

தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவின் டிஜிபியாக ஜே.கே.திரிபாதி, பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டம் ஒழுங்கை பராமரித்து குற்றங்களைத் தடுக்க முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.  சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய டிஜிபி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்...

முதலமைச்சருடன் புதிய தலைமைச் செயலாளர் சண்முகம் சந்திப்பு

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்க உள்ள சண்முகம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது....

டி.கே.ராஜேந்திரன் ஓய்வு

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெற்றார். அவர் கடந்து வந்த பாதை குறித்த செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.  திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் பிறந்த டி.கே.ராஜேந்திரன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகள் சார்ந்த படிப்பில் எம்.ஏ. பட்டம்...

தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம்

தமிழக காவல்துறையின் டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1ஆம் தேதி அவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார். தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக் காலம் வரும் 30-ந்தேதியுடன் நிறைவடைகிறது. புதிய டிஜிபி ஆக நியமிக்கப்படப்போவது யார் என கேள்வி எழுந்த நிலையில்,...

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் காவல் அதிகாரி ஜே.கே.திரிபாதி சந்திப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர் திரிபாதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் நிதித்துறை செயலாளர் சண்முகத்தை சந்தித்துப் பேசினார். தமிழ்நாடு டிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம், இந்த மாதத்தோடு முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த டிஜிபியாக, திரிபாதியை நியமிக்க உள்ளதாக தகல்...

போக்குவரத்து ஒழுங்குபடுத்துதலில் புதிய தொழில்நுட்பங்களை துவங்கி வைத்தார் முதலமைச்சர்

போக்குவரத்து ஒழுங்குபடுத்துதலில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தும் வகையில், மின்னனு பரிவர்த்தனை மூலம் அபராதம் வசூலிப்பதற்கான கையடக்கக் கருவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவிலான பணப்பரிவர்த்தனையற்ற மின்னணு கட்டண ரசீது வழங்கும்...

தமிழகத்தின் புதிய டிஜிபி ஜே.கே.திரிபாதிக்கு வாய்ப்பு...

தமிழகத்தின் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெறவுள்ள நிலையில் புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் புதிய டிஜிபியாக யாரை நியமிக்கலாம் என ஆலோசனையும், அதற்கான நடைமுறைகளும் நிகழ்ந்து வந்தன. மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு 6...