​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் இறுதிப் போட்டியில், செரினா வில்லியம்சை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்...

அதிகப் பெரும்பணக்காரர்கள் வாழும் நகரங்களின் தரவரிசையில் ஹாங்காங் முதலிடம்

மிகப் பெரும்பணக்காரர்கள் அதிகம்பேர் வாழும் நகரங்களின் தரவரிசையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சீனாவின் ஹாங்காங் முந்தியுள்ளது. உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் குறித்த ஆய்வை வெல்த் எக்ஸ் என்கிற நிறுவனம் நடத்தியுள்ளது. குறைந்தது 216கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டவர்களை மிகப்பெரும் பணக்காரர்கள் எனக்...

ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் மீண்டும் தொடக்கம்

வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் மீண்டும் தொடங்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வியாழக்கிழமை அதிகாலை அங்கு 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது,. இதன் காரணமாக அட்சுமா நகரில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள்...

சீன துறைமுகங்களில் பொருட்களை இறக்குமதி செய்ய நேபாளத்துக்கு அனுமதி

நேபாள அரசு வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் பொருட்களை சீன துறைமுகங்களில் இறக்குமதி செய்து கொள்ள இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட வடக்கு ஆசிய நாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள இந்திய துறைமுகங்களையே நேபாள...

ஜப்பானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

ஜப்பானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில் கடந்த 4-ஆம் தேதி ஜெபி புயல் தாக்கியது. இதில் ஏராளமான மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கியது. இவற்றிலிருந்து மக்கள் மீளாத நிலையில், ஹொக்கைடோ தீவில் ((Hokkaido)) நிலநடுக்கம்...

நிஸான் நிறுவனம், இந்தியாவில்1500 பேரை பணியமர்த்தத் திட்டம்

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான், இந்தியாவில் 1500 பேரை பணியமர்த்தப் போவதாகத் தெரிவித்துள்ளது. நிஸான் நிறுவனம் 2019-ல் இந்தியாவில் புதிய வகை சொகுசுக் கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான ஆய்வு மற்றும் மேம்ப்பாட்டுப் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சென்னை அருகே உள்ள...

உலகின் நீண்டகாலம் வாழும் ஜோடி உலக சாதனை படைத்தது

உலகின் வயதான தம்பதி என்ற உலக சாதனையை ஜப்பான் ஜோடி ஒன்று படைத்துள்ளது. டகாமட்ஷூ ((Takamatsu)) என்ற இடத்தைச் சேர்ந்தவர் மியாகோ மட்ஷூமோட்டோ ((Miyako Matsumoto)) இவர் கடந்த 1937ம் ஆண்டு மசாவோ என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மசாவோ ராணுவ வீரர்...

இந்திய மாணவர்-மாணவிகளுக்கு ஜூடோ தற்காப்புக் கலை பயிற்சி

தற்காப்புக் கலையான ஜூடோவை இந்தியாவில் மாணவ மாணவியருக்கு பயிற்சியளிக்க ஜப்பானில் இருந்து பயிற்சியாளர் குழு ஒன்று டெல்லி வந்துள்ளது. இக்குழுவினர், ஜூடோ நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். பெண்களுக்குப் பயிற்சியளிக்க  பெண் ஜூயோ மாஸ்டர்களும் இக்குழுவில்  இடம்பெற்றுள்ளனர். பெண்கள் தங்களை பாதுகாத்துக்...

ஜப்பானைப் புரட்டிப் போட்ட ஜெபி புயல்... 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீசிய கடும் புயலால், ஜப்பானின் பெரும்பாலான பகுதிகள் பேரழிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜப்பானின் மேற்குப் பகுதியை ஜெபி ((jebi)) என்று பெயரிடப்பட்ட பெரும் புயல்...

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்க அமெ., திட்டம் என தகவல்

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுடான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த அமெரிக்கா, அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தவிர்க்குமாறு, இந்தியா...