​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கடல் நீர்மட்டம் உயர்வதால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து என எச்சரிக்கை

கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இந்திய பெரும் ஆபத்தில் இருப்பதாக ஐநா சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்ரஸ் கவலை தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, உலகில் காலநிலை மாற்றம் என்பது மிகப்...

"ஒப்பந்தம் காந்திய சிந்தனைகளுக்கு எதிரானது... மனசாட்சி இடம் கொடுக்கவில்லை” - பிரதமர் மோடி

சீனாவை பின்புலமாக கொண்டிருந்த ஒருங்கிணைந்த பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துள்ளது. இந்தியர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  ஆசியான் கூட்டமைப்பில் உள்ள 10 நாடுகளுடன், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய...

வர்த்தக ஒப்பந்தம்.. நிராகரித்தது இந்தியா..!

சீனாவை பின்புலமாக கொண்டிருந்த ஆசிய மண்டல பொருளாதார கூட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துள்ளது. இந்தியர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆசியான் கூட்டமைப்பில் உள்ள 10 நாடுகளுடன், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா,...

இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான உச்சி மாநாட்டிலும், கிழக்காசிய உச்சி மாநாட்டிலும் இன்று பங்கேற்கிறார். 3 நாள் அரசு முறைப் பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி...

புதிய தொழில்நுட்பங்களுடன் தொழிற்சாலைகளுக்கான ரோபோட்டுகள் - ஷாங்காய் கண்காட்சியில் வைக்க ஜப்பான் முடிவு

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில், புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள தொழிற்சாலை பணிகளுக்கான ரோபோட்டுகளை பார்வைக்கு வைக்க ஜப்பான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஷாங்காயில் ஆண்டுதோறும் சீனா சர்வதேச இறக்குமதி கண்காட்சி நடைபெறுகிறது. ஜப்பானை சேர்ந்த பிரபல ரோபோ தயாரிப்பு நிறுவனமான நாசி-புஜிகோஷி,...

புஜி மலையில் ஏறியதை நேரலையாக ஒளிபரப்பிய நபர் கீழே சறுக்கி விழுந்து பலி

ஜப்பானின் மிக உயரிய மலையான புஜியில் ஏறிய காட்சியை நேரலையாக ஒளிபரப்பிய நபர் ஒருவர், கீழே சறுக்கி விழுந்து பலியானார். 12,388 அடி உயரம் கொண்ட புஜி மலையில் குளிர்காலத்தில் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை பொருட்படுத்தாமல் டெட்ஜோ என்ற...

ஜப்பான் குழித்தட்டு முறையில் நடவு

ஜப்பானைப் போன்று குழித்தட்டு முறையில் நெல் நாற்று நடவு செய்யும் முறை, நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டு நெல் நாற்று நடவு முறையான குழித்தட்டு முறையை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் திருக்கடையூரில் அறிமுகம்...

டோக்கியோவில் 46ஆவது வாகன கண்காட்சி தொடக்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் வாகன கண்காட்சியில் பல்வேறு புதிய தயாரிப்பு நவீன கார்கள், வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற டோக்கியோ 46ஆவது வாகன கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில் 180 கார் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பங்கெடுத்துள்ளன. இந்நிறுவனங்களில் டோயோட்டா நிறுவனம்,...

இந்தியாவிலிருந்து பிரேசில் செல்ல இனி விசா பெறத் தேவையில்லை

இந்தியர்கள் பிரேசில் வர விசா தேவையில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜயர் போல்சொனாரோ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிபராகப் பொறுப்பேற்ற ஜயர் போல்சொனாரோ, குறிப்பிட்ட சில வளர்ந்த நாடுகளை சேர்ந்தவர்கள் பிரேசில் வர விசா தேவையில்லை என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தினார். அந்த வகையில்,...

டோக்கியோவில் தொடங்கியுள்ள ‘கார் கண்காட்சி’

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள மின்சார கார்களின் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. காற்றுமாசு விதிகளை உலக நாடுகள் கடுமையாக்கியதை அடுத்து, கார் நிறுவனங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் மின்சார கார்களை உற்பத்தி செய்வதில் போட்டிப்போட்டு வருகின்றன. அந்தவகையில் ஜப்பானை சேர்ந்த...