​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாகர்கோவில் நகராட்சி மாநராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிஅறிவிப்பு

 நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் 13 வது மாநகராட்சியாக நாகர்கோவில் உருமாறுகிறது.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,...

ஒளி வெள்ளத்தால் வண்ணமயமான கடற்கரை நகரம் கஸ்காய்ஸ்

போர்ச்சுகல் நாட்டின் கடற்கரை நகரமான கஸ்காய்ஸ்-இல் நடந்த வண்ணமய ஒளித் திருவிழா பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்யும் முயற்சியாக, லுமினா எனப்படும் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் அங்கு நடத்தப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு கஸ்காய்ஸ் நகரம் வண்ண ஒளிகளால்...

கேரளாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அதிரடி யுக்திகள்

கேரளாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அதிரடி யுக்திகளை அம்மாநில அரசு வகுத்துள்ளது. கேரளாவில் மழை வெள்ள பாதிப்பால் சுற்றுலாப்பயணிகள் வரத்து மந்தமானது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 12 முக்கிய அம்சங்கள் அடங்கிய செயல்...

குன்னூர் - மேட்டுப்பாளையம் பகுதியில் வலம் வரும் இருவாச்சிப் பறவைகள்

நீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள மரங்களில் அமர்ந்துள்ள அரியவகை இருவாச்சி பறவைகள், சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்தச் சாலையின் அருகே உள்ள அருவியில் தண்ணீர் கொட்டுவதுடன், பசுமை படர்ந்த இப்பகுதியில் இதமான வானிலையும்...

பரளிக்காட்டில் சூழல் சுற்றுலா மீண்டும் துவக்கம்

கோவை மாவட்டம் பரளிக்காட்டில் சூழல் சுற்றுலா மீண்டும் துவக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பரளிக்காடு என்னுமிடத்தில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. அடர்ந்த வனத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில் பரிசல் பயணம் செல்லவும், பசுமை காடுகள்...

தன்னை வேட்டையாட வந்த சிறுத்தையை கண்டு ஓடாமல் குரைத்தே ஓடவிட்ட நாய்..!

ராஜஸ்தானில் தன்னை வேட்டையாட வந்த சிறுத்தை ஒன்றை குரைத்தே ஓடவிட்ட நாய் ஒன்றின் தீரமிக்க வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலானாவில் உள்ள சிறுத்தை புலிகள் காப்பகத்தில் திறந்த ஜீப்பில் இருந்த படியே சுற்றுலா பயணிகள் சிறுத்தையை பார்ப்பதற்கு காத்திருந்தனர்....

சுற்றுலாப்பயணிகளை வருகையில் தமிழகம் முதலிடம் - வெல்லமண்டி நடராஜன்

சுற்றுலாப் பயணிகள் வருகையில் நாட்டிலேயே தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்....

சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் 8வது நாளாக குளிக்கத் தடை

நீர் வரத்து அதிகரிப்பால் தேனி மாவட்டம் கம்பம் சுருளி அருவியில் எட்டாவது நாளாக குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஹைவேவிஸ் மலையில் உள்ள தூவானம் அணையிலிருந்தும்,  ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு...

இந்தோனேசியாவில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அந்நாட்டில் லாம்போக் தீவில் கடந்த 6-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டு, 80-க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்நிலையில், காலை அந்த தீவில் செம்பலுன் ((Sembalun)) என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.3 என்ற...

குற்றாலத்தில் 6 நாட்களாக குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்ததை அடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த...