​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போலி ஆவணங்களை சமர்பித்து வங்கியில் மோசடி செய்த வழக்கு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தலா 9 ஆண்டுகள் சிறை

வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்ற வழக்கில் 5 பேருக்கு தலா 9 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை தம்பு செட்டி தெருவில்...

மனைவியைக் கொன்று விட்டு தற்கொலை என நாடகமாடிய கணவன்..!

சென்னையில் மனைவியை பெல்டால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தற்கொலை என்று நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருவிக நகர் அண்ணா தெருவைச் சேர்ந்த கல்பனா என்ற பெண், கடந்த 11 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது...

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, இருதரப்பினர் இடையே மோதல்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செங்கோட்டையில் நேற்று இரவு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. மேலூர் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம்...

ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

சென்னை பெரும்பாக்கத்தில் ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியரான சுரேஷ் மனைவி பார்கவி என்ற ரோகினியுடன் பெரும்பாக்கத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 வயதில் பெண்...

எரிசாராய கடத்தலுக்காக டவேரா கார்களாக பார்த்து திருடி வந்தவன் கைது

எரிசாராயத்தை கடத்துவதற்கு வசதியாக இருக்கும் டவேரா கார்களாக பார்த்து திருடி வந்த பிரபல கொள்ளையனை திருச்சியில் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திருச்சி உலகநாதபுரத்தில் கிருஷ்ணவேனி என்பவருக்குச் சொந்தமான டவேரா கார் திருடு போனது. இது தொடர்பாக...

ரெப்கோ வங்கி மேலாளர் வீட்டின் கொள்ளை சம்பவம் குறித்து பணிப்பெண் அளித்த தகவலின்பேரில், 4 பேர் கைது

சென்னை ஜமீன் பல்லாவரத்தில் ரெப்கோ வங்கி மேலாளரின் வீட்டில் கத்தியைக் காட்டி 227 சவரன் கொள்ளையடித்த வழக்கில், வீட்டு பணிப்பெண்ணை பிடித்து விசாரித்த போலீசார், மதுரையில் 4 பேரை கைது செய்துள்ளனர். சென்னை தியாகராய நகர் ரெப்கோ வங்கி மேலாளராக இருக்கும் யோகசேகரன்,...

ரூ.60,000 கோடி மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் ஏற்றுமதி - அகில இந்திய பார்மசி கவுன்சில் தலைவர் தகவல்

இந்தியாவில் இருந்து 200 வெளிநாடுகளுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக, அகில இந்திய பார்மசி கவுன்சில் தலைவர் டாக்டர் சுரேஷ் தெரிவித்திருக்கிறார். உலக அளவில் பிறக்கும் குழந்தைகள் இந்தியாவில் தரமான முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை...

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் - அமித்ஷா

 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  பாஜக தேசிய செயற்குழுவின் 2 நாள் கூட்டம் டெல்லியிலுள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித்ஷா,...

நாடு முழுவதும் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்க முடிவு..!

நாடு முழுவதும், 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 விமான நிலையங்களை கட்டமைக்க மைய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள், நூறு விமான நிலையங்களை...

ஏர்இந்தியா விமானத்தில் குடிபோதையில் ஆண் பயணி அட்டூழியம்

ஏர் இந்தியா விமானத்தில் அருகில் இருந்த பெண்ணின் இருக்கை மீது குடிபோதையில் சிறுநீர் கழித்த நபர் குறித்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த ஏஐ 102 விமானத்தில் இந்த...