​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி இன்று பணிக்கு வரவில்லை

பணியிட மாற்ற முடிவால் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி இன்று பணிக்கு வராத நிலையில், அவரது அமர்வில் இன்று விசாரிக்கப்பட இருந்த 75 வழக்குகள், வேறொரு அமர்வில் பட்டியலிடப்பட்டன. இதனிடையே, தலைமை நீதிபதி தஹில்...

ப.சிதம்பரம் ஒரு கேடி சிதம்பரம் - அமைச்சர்

உலகம் முழுவதும் சொத்து வைத்திருக்கும் ப.சிதம்பரம் ஒரு கேடி சிதம்பரம் என அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வரவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் அதற்கான...

நாமக்கல்லில் புதிய அரசு சட்டக் கல்லூரி

நாமக்கலில் புதிய சட்டக் கல்லூரியை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.  நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய  அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாமக்கலில் அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து நாமக்கல் -...

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற வகையில் ப.சிதம்பரம் கைது

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதை நிரூபிக்கும் வகையில், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் சி.வி.சண்முகம்,  தமிழகத்திற்கே தலை குனிவை சிதம்பரம் ஏற்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.... விழுப்புரத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,...

நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்கு - அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்

நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்கு தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். நக்கீரன் வார இதழில், சிலைக் கடத்தல் குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பாக அந்த இதழின் ஆசிரியர் கோபால் மற்றும் தலைமை நிருபர்...

வழக்கத்தில் இல்லாத, 141 பழைய சட்டங்களை நீக்க சட்ட மசோதா

தமிழகத்தில் வழக்கத்தில் இல்லாத மற்றும் மிகவும் பழமையான சட்டங்களை நீக்குவதற்கான சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேரவையில் தாக்கல் செய்தார். மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், சில சட்டங்களின் பட்டியலை அனுப்பி, அதில் எந்தெந்த சட்டங்கள் தற்போது தமிழ்நாட்டில் பயன்பாட்டில்...

அரசு சட்டக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி

அரசு சட்டக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி வழங்குவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மாவட்ட நீதிமன்றங்கள் உள்ள இடத்தில் அரசு சட்டக்கல்லூரி துவக்கலாம் என்ற விதிக்கு ஏற்ப காஞ்சிபுரத்தில் சட்டக் கல்லூரி அமைக்க அரசு முன்வருமா...

நீட் தேர்வு மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது

நீட் தேர்வு மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்திருக்கிறார். நீட் விவகாரத்தில் தேவைப்பட்டால் மீண்டும் சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் கூட்டப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். நீட் தேர்வில் விலக்கு கோரி...

தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் திட்டத்தை துவங்கினால் கிரிமினல் வழக்கு

தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை துவங்க முற்பட்டால் கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர...

முதலமைச்சர் தங்களை கொச்சைப்படுத்திவிட்டதாக திமுக வெளிநடப்பு

தபால்துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படுகிற வரை, தமிழக அரசு தொடர்ந்து போராடும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்ற நிலையில், திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தபால்...