​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழ்நாடு கெமிக்கல் என்ற ரசாயன ஆலையை நிரந்தரமாக மூடக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தனியார் ரசாயன ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, நாளை பொதுமக்கள் போராட்டம் நடத்த இருப்பதால், 1,500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காரைக்குடி அருகே கோவிலூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் தமிழ்நாடு கெமிக்கல் என்ற தனியார்...

வைகை அணையில் இருந்து பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையில் இருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் 17நாட்களில் 11அடி குறைந்துள்ளது. தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த மாதம் வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து மதுரை மாவட்டத்தின் மேலூர்,...

இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது சவாலானது - மயில்சாமி அண்ணாதுரை

இந்தியா சார்பில் 2022-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது சவாலானது என்று இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, சர்வதேச...

சாதனையாளர்களை உருவாக்கி வரும் மாற்றுத்திறனாளி குத்துச்சண்டை வீரர்

சிவகங்கை அருகே விபத்தில் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி குத்துச்சண்டை வீரர், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகிறார்.  திருப்பாச்சேத்தி கிராமத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான நிமலன் கடந்த 2011ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறவிருந்த குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சி விமான...

தைலமரங்கள் நடும் வனத்துறையின் முடிவுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் தைலமரங்கள் நடப்பட்டதற்கு எதிர்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடி - கண்டனூர் சாலையில் உள்ள வனத்துறையின் 25 ஏக்கர் நிலத்தில் ஏற்கனவே இருந்த பல்வேறு மரங்களை வெட்டிவிட்ட வனத்துறையினர், 40...

நெல்லை அடமானம் வைத்து பலே மோசடி..!

விருதுநகரில், பருப்பை இருப்பு வைத்திருப்பதாக கூறி நடைபெற்ற பலே மோசடி போல், காரைக்குடி அருகே சாக்கோட்டையில், நெல்லை அடமானம் வைத்து, நூதன முறைகேடு நடைபெற்றிருக்கிறது. வங்கியில் இருப்பு இருப்பதாக காண்பித்து கடன் வாங்கியவரே, ஒரு கோடியே 53 லட்ச ரூபாய் மதிப்புள்ள நெல்...

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்ககடல் பகுதி மற்றும் ஒடிசாவை ஒட்டிய கடற்கரை பகுதியில் தீவிரக்காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு...

வைகையாற்றில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை ஆற்றில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்காக செப்டம்பர் 10 ஆம் நாள்...

மதுரை வரிச்சூரில் கள்ள நோட்டுக் கும்பல் கைது

மதுரை வரிச்சூரில் கைது செய்யப்பட்ட கள்ளநோட்டுக் கும்பலுக்கு, சர்வதேச கடத்தல் குழுவுடன் தொடர்புள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை - சிவகங்கை சாலையில் உள்ள வரிச்சூரில் கள்ள நேட்டுக்களை மாற்றுவதற்காக சிலர் சுற்றி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே நீர்நிலைகளில் கரைப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. திருச்சியின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட 267 விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, சிந்தாமணி அருகே காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 300...