​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

TNPSC முறைகேடு வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

TNPSC முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு மற்றும் சிபிஐ பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், முறைகேடு புகாரில் இதுவரை கீழ்மட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மட்டுமே கைது...

திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு எதிராக தமிழக அரசு அவதூறு வழக்கு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. நாளிதழில் கடந்த 31ஆம் தேதி வெளியான செய்தியில், டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஜெயகுமாருக்கு தொடர்பு இருப்பதாகவும், சிபிஐ விசாரணைக்கு...

8,888 பேரை தேர்வு செய்வதற்கான சீருடைப்பணியாளர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க உத்தரவு

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் எல்லா தேர்வுகளிலும் முறைகேடுகள் நடைபெறுவது கேலிக்கூத்தாக இருப்பதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட...

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வில் முறைகேடு - சிபிஐ விசாரணை கோரி வழக்கு

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய தேர்வில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சீருடைப்பணியாளர் தேர்வாணைய தேர்வில், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகமானோர் தேர்வானதாகவும், குறிப்பிட்ட...

யுபிஎஸ்சிக்கு நிகராக டிஎன்பிஎஸ்சி மாற்றப்படும் : அமைச்சர் ஜெயகுமார்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு நிகராக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் தொடர்பாக திமுக உறுப்பினர் சுதர்சனம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், முறைகேடுகள் தொடர்பாக...

TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் யார் தலையீடு இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.  டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், முறைகேடுகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டார். வருங்காலங்களில் இதுபோல நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம்...

ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடு என மு.க.ஸ்டாலின் புகார்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகள் தொடர்பான கைதுப்படலங்கள் நீடித்து வரும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது முகநூல் பதிவில், சேலத்தில் ஒரே...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்ட மாவட்ட அமர்வு நீதிமன்றம் விசாரணையை வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த சம்வத்தில் திருநாவுக்கரசு, மணிவண்ணன், சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில்,...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா ! பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில்,...

ஷீனா போரா படுகொலை வழக்கு - பீட்டர் முகர்ஜிக்கு ஜாமீன்

இளம் பெண் ஷீனா போரோ கொலை வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்ட பீட்டர் முகர்ஜிக்கு 4 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கொலை நடந்த போது பீட்டர் முகர்ஜி இந்தியாவில் இல்லை. அவர் மீது எந்த...