​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கல்லூரி பேருந்து விபத்து.. 7 மாணவிகள் காயம் - மறியல்

பெரம்பலூர் அருகே தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பேருந்து தாறுமாறாக ஓடி, பேருந்து நிறுத்தத்தில் புகுந்து ஏற்படுத்திய விபத்தில் 7 மாணவிகள் காயம் அடைந்தனர். சித்தலி என்னுமிடத்திலுள்ள பேருந்து நிறுத்தத்தில் அரசுப்பள்ளி மாணவிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வாகனம்...

டிடி கேசும்.. திருப்பிய அரசியல் பிரமுகரும்..! வாகன சோதனை பரிதாபங்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, குடிபோதையில் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவருக்கு அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளரிடம் இருந்து, குடிபோதை ஆசாமியை விடுவித்ததோடு வாகனத்தையும் முன்னாள் கவுன்சிலரின் மகன் பறித்து சென்ற நிலையில், அப்பகுதி மக்கள் போலீசாரை கண்டித்து சாலைமறியலில்...

கஜா புயல் பாதிப்பின் போது நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்திய வழக்கு ரத்து

கஜா புயல் பாதிப்பின் போது நிவாரணம் கேட்டு சாலைமறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதேவேளையில் காவல் வாகனம் தாக்கப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. கஜா புயல் பாதிப்பின் போது நிவாரணம் கேட்டு,...

இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் ஒருவர் மரணம் - உறவினர்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கொடுக்கம்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி நாடக...

சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்ற போது கலவரம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது உருவான கலவரத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தாக்கப்பட்டது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் சருத்திப்பட்டியைச் சேர்ந்த சிரஞ்சீவி,...

தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் சாலைமறியல்

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதைக் கண்டித்து பெங்களூரு - மைசூரு சாலையில் கன்னட அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் 9.2 டி.எம்.சி. தண்ணீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனை கர்நாடக அரசும் ஏற்று...

சாலை விபத்தில் தந்தை-மகன் உயிரிழப்பு, ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலைமறியல்

ஈரோடு அருகே சாலை விபத்தில் தந்தை மற்றும் மகன் பலியானதை தொடர்ந்து உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  ஈரோடு அருகேயுள்ள மேட்டுபாளையம் கிராமத்தை சேர்ந்த தனபால் தனது 4 வயது மகன் சபரியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சித்தோடு...

வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

மஹாராஷ்டிராவில் வேலைவாய்ப்பு கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. புனேவில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பள்ளி, கல்லூரி,உள்ளிட்டவை ஏற்படுத்தித் தரக் கோரி நீண்ட நாள் கோரிக்கை விடுக்கப்பட்டது. திங்களன்று புனேவில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி...

ஐஐடி மாணவர் தற்கொலைக்கு போலீசாரே காரணம் எனக் கூறி உறவினர்கள் சாலைமறியல்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே ஐஐடி மாணவர் தற்கொலைக்கு போலீசாரே காரணம் எனக் கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். ஐஐடி மாணவரான இவர் மீது அடிதடி வழக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட...

சின்னத்தம்பி யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விட வலியுறுத்தி விவசாயிகள் சாலைமறியல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஊருக்குள் புகுந்துள்ள காட்டுயானை சின்னத்தம்பி, விளைநிலங்களை சேதப்படுத்துவதால், அதைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட வலியுறுத்தி விவசாயிகள் சாலைமறியலில் இறங்கினர். காட்டு யானை சின்னத்தம்பி, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் அமராவதி சர்க்கரை ஆலைக்கு சொந்தமான கரும்புத்...