​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சபரிமலை ஐயப்பன் கோயில் பிப்.13ஆம் தேதி திறப்பு

மாசி மாத பூஜைகளுக்காக வரும் 13-ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட இருக்கிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாட்கள் திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, மாசி மாத...

சபரிமலை வழக்கை 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது சரியே - உச்சநீதிமன்றம்

சபரிமலை வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது சரியே என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய...

சபரிமலை கோவில் நகைகளின் முழுவிவரங்களை கணக்கெடுக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்

சபரிமலை கோவில் நகைகளின் முழுவிவரங்களை கணக்கெடுக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. சபரிமலை கோவில் நகைகளை பந்தளம் அரச குடும்பம் பாதுகாத்து வருகிறது. இதுதொடர்பாக, பந்தளம் அரச குடும்பத்திற்குள்ளேயே இரு பிரிவினர் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், சபரிமலை கோவில் நகைகளை...

சபரிமலை கோவில் நிர்வாகத்திற்காக தனிச் சட்டம்..!

சபரிமலை கோவில் நிர்வாகம் தொடர்பான புதிய சட்டத்தை விரைவில் கொண்டு வர இருப்பதாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிரான மனுக்களை ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில் கேரள அரசின் சார்பில்...

சுவாமி ஐயப்பனின் திருவாபரணம் கடவுளுக்கு சொந்தமானதா? இல்லையா? உச்சநீதிமன்றம் கேள்வி

சபரிமலை கோவிலில், சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்களை, கேரள அரசே முன்வந்து எடுத்து, பிரத்யேகமாக பராமரிக்க வாய்ப்பும், வசதியும் இருக்கிறதா? அல்லது இல்லையா? எனக் கேள்வி எழுப்பியிருக்கும் உச்சநீதிமன்றம், இதுகுறித்து உரிய பதிலளிக்குமாறும், உத்தரவிட்டிருக்கிறது. மேலும், சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள்...

சபரிமலை வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கில், சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை, வருகிற வியாழக்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது. இன்றைய விசாரணையின்போது, பொதுநல பிரச்சினையாக கருதி சீராய்வு மனுக்களை விசாரிக்க, பல்வேறு தரப்பு வழக்கறிஞர்களும் வாதிட்டனர். உச்சநீதிமன்றம்...

சபரிமலை உள்ளிட்ட மதவழிபாட்டுத் தலங்களில் பெண்கள் பாகுபடுத்தப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணை

சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன முழு அமர்வு இன்று முதல் விசாரணை மேற்கொள்கிறது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிராக மறுசீராய்வு மனுக்கள் மேல் முறையீட்டு...

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் வரும் 3ம் தேதி முதல் விசாரணையை மேற்கொள்கிறது உச்சநீதிமன்ற அமர்வு

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன முழு அமர்வு வரும் 3ம் தேதி முதல் விசாரணையை மேற்கொள்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு...

சபரிமலை விவகாரத்தில் தொடரப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை 10 நாட்களில் விசாரித்து முடிக்க முடிவு

சபரிமலை விவகாரத்தில் தொடரப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை 10 நாட்களில் விசாரித்து முடிக்க உள்ளதாக, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. யார் ஒருவருக்காகவும், கூடுதல் நாட்கள் விசாரணை நடைபெறாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதுதொடர்பான வழக்கை அண்மையில் விசாரித்த, 9 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன...

சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் ரூ.263.57 கோடி

மண்டல,மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 263.57 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது. மண்டல, மகர விளக்கு காலத்தை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. மண்டல பூஜை டிசம்பர் 27-ந்...