​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு  அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் செவ்வாய்கிழமை முதல் விலை குறைப்பு நடைமுறைக்கு வருவதாகவும், இதன் மூலம் அரசுக்கு சுமார் ஆயிரத்து 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்...

ஏழுமலையான் கோவிலில் ரத்தன் டாடா சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ரத்தன் டாடா, சுவாமி தரிசனம் செய்தார்.இந்தியாவிலேயே அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேன்சர் மருத்துவமனை, திருப்பதியில் டாடா குழுமத்தின் சார்பாக இன்று தொடங்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனையை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு மற்றும் ரத்தன் டாடா ஆகியோர் இணைந்து தொடங்கி...

கெஜ்ரிவால் போராட்டத்திற்கு 4 மாநில முதலமைச்சர்கள் ஆதரவு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று மம்தாபானர்ஜி உள்பட 4 மாநில முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர். டெல்லி தலைமை செயலாளர் அன்சுபிரகாஷ், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களால் கடந்த பிப்ரவரி மாதம்...

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியமைக்க முடியாது - சந்திரபாபு நாயுடு

பிரதமர் நரேந்திர மோடி தமது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால், 2019 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியமைக்க முடியாது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். விஜயவாடாவில் தெலுங்கு தேசம் கட்சியின் வருடாந்திர மாநாட்டை சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்து...

சந்திரபாபு நாயுடுவின் உணர்வு தமிழக ஆட்சியாளர்களுக்கு வர வேண்டும் - ஸ்டாலின்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு உள்ள உணர்வு தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்களுக்கும் வர வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சரளையில் நடைபெறவுள்ள திமுக மண்டல மாநாட்டுப் பணிகளை பார்வியிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குறுதிகளை நிறைவேற்றாததால்...

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் ஆதரிக்கத் தயார் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கைக்கு ஆதரவாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஆதரிக்கத் தயார் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.  மத்திய பட்ஜெட் தாக்கலானது முதலே ஆந்திரமாநிலத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என அதிருப்தி...

ரூ.1,91,000 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது ஆந்திர அரசு

ஒரு லட்சத்து 91 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை ஆந்திர சட்டப்பேரவையில், அம்மாநில நிதியமைச்சர் யனமலா ராமகிருஷ்ணடு தாக்கல் செய்துள்ளார். வரவு செலவுகளுக்குப் பின்னர் உபரி வருமானமாக 5 ஆயிரத்து 235 கோடி இருப்பதாக இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆந்திர...

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரம், பா.ஜ.க. - தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி முறியும் சூழல் ?

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுமென்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டி வரும் நிலையில், பா.ஜ.க.வுடனான கூட்டணி உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட வாக்குறுதிகளின் பேரில், 2014-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்தித்த பா.ஜ.க....