​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவு முட்டைகள் அழுகியதால் பொறுப்பாளர்கள் ஆய்வு

கடலூர் மாவட்டம் மங்களூர் சுற்றுவட்டாரத்தில் ஆய்வு செய்த பின் மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வழங்கப்பட்டன. திட்டக்குடி அடுத்த மேலாதனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 76  மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் சத்துணவு சாப்பிடும் 70 மாணவர்களுக்கு நேற்று வழங்கப்பட்ட...

சத்துணவு முட்டை கொள்முதலுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரும் அரசாணை ரத்து

சத்துணவு முட்டை கொள்முதலுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரும் அரசாணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது. சத்துணவு திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 48 லட்சம் முட்டைகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரி தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அரசாணை...

சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரில் புதியமுறை - முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள கோழிப்பண்ணை உரிமையாளர்கள்

கோழிப்பண்ணை உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று, சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டர் முறையில் மாற்றம் கொண்டு வந்துள்ள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் சின்ராசு, கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சத்துணவு முட்டைகள் விநியோகம்...

அரசுப்பள்ளியின் பூட்டை உடைத்து அரிசி, பருப்பு திருட்டு

திருப்பூரில் அரசுப்பள்ளியின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்கள், சத்துணவு முட்டைகளை சமைத்து சாப்பிட்டு சென்றுள்ளனர். அ.செட்டிபாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளி, வெள்ளி முதல் 3 நாள்கள் விடுமுறைக்குப் பின் திங்களன்று திறக்கப்பட்டது. பள்ளி அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்...

திருச்செங்கோட்டில் கிறிஸ்டி நிறுவனத் தலைமையகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கிறிஸ்டி நிறுவனத் தலைமையகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சத்துணவு முட்டை முறைகேடு புகார் தொடர்பாக கடந்த மாதம் கிறிஸ்டி நிறுவனம் தொடர்புடைய 170க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. அந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்...

எஸ்பிகே குழும உரிமையாளர் நாகராஜன் வருமான வரி அலுவலகத்தில் ஆஜர்

எஸ்பிகே குழுமத் தலைவர் நாகராஜன் சென்னை வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகிக் கணக்கில் காட்டாத சொத்துக்கள் தொடர்பான வினாக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார். மத்திய மாநில அரசுகளின் சாலைப்பணிகளை ஒப்பந்தம் எடுத்துச் செய்துவரும் எஸ்பிகே குழுமத்தின் உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த...

சத்துணவு முட்டைகளை நேரடியாக கொள்முதல் செய்தால் விலை குறைப்பு - தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம்

சத்துணவுக்கான முட்டைகளை தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் மூலம் நேரடியாக கொள்முதல் செய்தால் கிறிஸ்டி நிறுவனத்தை விட விலையை குறைத்து தர முடியும் என்று தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. பண்ணையாளர்களுக்கு கிறிஸ்டி நிறுவனம் 31 கோடி ரூபாய் நிலுவை...

முட்டை டெண்டரில் முறைகேடு நடைபெறவில்லை: அமைச்சர் சரோஜா

சத்துணவு முட்டை டெண்டரில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று  சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பங்கற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா, உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டு...

சத்துணவு முட்டை டெண்டரை தங்களிடம் வழங்க வேண்டும், கோழிப்பண்ணையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

அரசுக்கு குறைந்த விலையில் தரமான சத்துணவு முட்டைகளை நேரடியாக விநியோகம் செய்ய தயார் எனவும் எனவே டெண்டரை தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசுப் பள்ளிகளுக்கு சத்துணவு முட்டைகளை விநியோகம் செய்துவந்த திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர்...

சத்துணவு முட்டை டெண்டருக்கு விண்ணப்பித்திருந்த 6 நிறுவனங்களின் டெண்டர் கோரும் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

தமிழகத்தில் உள்ள குழந்தைகள் மையங்கள், பள்ளிகளில் உள்ள சத்துணவுக் கூடங்களுக்கு முட்டை வழங்குவதற்கான டெண்டருக்கு 6நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அவை அனைத்துமே நிராகரிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள குழந்தைகள் மையங்கள், தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் உள்ள சத்துணவுக் கூடங்களுக்கு...