​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய மேலும் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் மேலும் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். டங்தர் செக்டார் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக நேற்று தகவல் வந்ததை அடுத்து, பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். 2 தீவிரவாதிகள் நேற்று...

பேரறிவாளனை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை நேரில் சந்தித்து அற்புதம்மாள் கோரிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் அற்புதம்மாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.  ஆளுநர் மாளிகையில் பன்வாரிலாலை சந்தித்த அற்பதம் அம்மாள், தமது மகனின் வழக்கு தொடர்பான 3...

பீகார் முசாபர்பூரில் முன்னாள் மேயர், ஓட்டுநர் சுட்டுக்கொலை

ஆந்திராவில் எம்எல்ஏக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தின் பரபரப்பு அடங்கும் முன், பீகாரில் முன்னாள் மேயரும், அவரது கார் ஓட்டுநரும் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். முசாபர்பூரில், பனாரஸ் வங்கி ரவுண்டானா அருகே இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. முன்னாள் மேயர் சமீர் குமார், தனது காரில் சென்று...

கொடைக்கானலில் கண்டெடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாகத் தகவல்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கடந்த வாரம் மலைப்பாதையோரம் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே அவரை கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  கடந்த 18ஆம் தேதி கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டம் பாறை அருகே அழுகிய நிலையில்...

கரூர் அருகே செல்போன் திருடியதாக 15 வயது சிறுவன் அடித்துக் கொலை - 5 பேர் கைது

கரூர் அருகே செல்போன் திருடியதாக கூறி 15 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், 5 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.  கரூர் மாவட்டம் உப்பிடமங்களத்தைச் அடுத்த அல்லாலிகவுண்டனூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன், 8 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, அதற்குமேல்...

ஆபத்தான இணையதள கேம்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக, சைபர் ட்ரை வயா ஆப்பை உருவாக்கி வரும் மத்திய அரசு

ப்ளூ வேல், மோமோ போன்ற தற்கொலைக்கு தூண்டும் ஆபத்தான இணையதள கேம்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக, அரசே புதிய கேம் ஆப்பை உருவாக்கி வருகிறது.  சைபர் ட்ரைவயா (cyber trivia) எனப்படும் இந்த ஆப், குழந்தைகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவர்கள் அளிக்கும் பதிலுக்கு...

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி MLA, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுட்டுக்கொலை

ஆந்திர மாநிலத்தில், அரக்கு வேலி சட்டமன்ற உறுப்பினர் சர்வேஸ்வர ராவ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேரி சோமா ஆகிய இருவரையும் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர்.  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரக்கு வேலி தொகுதி தெலுங்கு தேசக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்...

காஷ்மீர் காவல் அதிகாரிகள் கொலையில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்கு தொடர்புள்ளது தெரியவந்ததால்தான் இந்தியா - பாக் இடையிலான பேச்சு ரத்து

ஜம்மு காஷ்மீரில் காவல் அதிகாரிகள் கொலையில் பாகிஸ்தான் உளவுத்துறைக்குத் தொடர்புள்ளது தெரியவந்ததால்தான் இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான பேச்சு ரத்து செய்யப்பட்டுள்ளது. நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டம் நடைபெறும் நாளில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜும், பாகிஸ்தான் வெளியுறவு...

செல்போன் திருடியதாகக் கூறி 15 வயது சிறுவன் அடித்துக் கொலை

கரூர் அருகே செல்போன் திருடியதாக 15 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரை அடுத்த அல்லிக்கவுண்டனூரைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் பாலசுப்பிரமணி. 8ஆம் வகுப்பு வரை படித்த அவர் அதன்பின்னர் பள்ளிக்குச்...

கருணாசுக்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ், அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில், கடந்த 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 5 அம்ச கோரிக்கைகளை...