​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி

திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 2 புதிய மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் 600 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். வேலூர் மாவட்டத்தை பிரித்து புதிதாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 மாவட்டங்களையும் 28-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி...

வடசென்னையில் 800 மெகாவாட் மின்னுற்பத்தி மார்ச்சில் தொடங்கும் - அமைச்சர் தங்கமணி

வடசென்னையில் 800 மெகாவாட் திறன்கொண்ட அனல் மின் உற்பத்தித் திட்டத்தை முதலமைச்சர் வரும் மார்ச் மாதம் தொடங்கி வைப்பார் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். காட்பாடியில் மின்வாரிய மண்டலங்களுக்கு இடையேயான மகளிருக்கு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது....

பொதுமேடையில் திமுக எம்எல்ஏ அமைச்சருடன் வாக்குவாதம்...

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்ட முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி. வீரமணிக்கும் தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமாருக்கும் இடையே மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் ஆதரவாளர்கள் கைகலப்பில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்...

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் - அமைச்சர் கே.சி.வீரமணி

சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போல, நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் அதிமுக நிர்வாகிகளுடன் நடைபெற்றது. இதில் வணிகவரித்துறை அமைச்சர்...

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை வரும் 30ம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, வருகின்ற 30ஆம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். காட்பாடி அருகே அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் புதிய...

நக்சல் தாக்குதலில் உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நக்சல் தாக்குதலில் உயிரிழந்த போலீசாருக்கு 36 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1980-ஆம் ஆண்டு திருப்பத்தூரில் நக்சல் தாக்குதலில் காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமை காவலர் ஆதிகேசவலு, காவலர்கள் யேசுதாஸ், முருகேசன் ஆகியோர் பலியானார்கள். இந்நிலையில் திருப்பத்தூர் காவல்...

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியது

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு ஆட்சியரகத்தைச் சுற்றிலும் 150 போலீசார் பாதுகாப்பு...

ஜி.எஸ்.டி.-யால் எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் வீரமணி

ஜி.எஸ்.டி.,யால் வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், வணிகவரித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மைதீன்கான், ஜி.எஸ்.டி.யால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு...

வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு தாமதமாக வந்த அதிமுக வேட்பாளர்

வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாமதமாக வந்ததால், பெரும்பாலான நிர்வாகிகள் திரும்பிச் சென்றனர். திருவண்ணாமலை மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம், அந்த தொகுதிக்கு உட்பட்ட வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் நடைபெற்ற...

ஓ.பி.எஸ். மகனுக்கு சீட்டு கொடுத்ததில் தவறில்லை - கே.சி.வீரமணி

துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்து வருவதால் அவருக்கு சீட்டு கொடுத்ததில் தவறில்லை என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். வேலூரில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி.சண்முகத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து...