​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரயில்வே டிக்கெட் முன்பதிவு படிவத்தில் தமிழுக்கு பதிலாக மலையாளம்

திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் தமிழ் மொழிக்கு பதிலாக மலையாளம் இடம்பெற்றதால் படிவத்தை நிரப்புவதற்கு பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். ரயில்வே அலுவலக மொழியாக இந்தி, ஆங்கிலம் இருந்தாலும் முன்பதிவு படிவத்தில் அந்தந்த மாநிலத்தின் பிராந்திய மொழி இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் தெற்கு...

உயர்மின்கோபுர விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம் - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அக்கட்சி ஆட்சி செய்யும் கேரளாவில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில்  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிருவோருக்கான விருப்ப மனுக்கள் வழங்கிய பிறகு பேசிய அமைச்சர் தங்கமணி,...

மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

கேரளாவைப்போல் தமிழகத்திலும் பள்ளி வேலை நேரத்தில், மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோம் புனித பீட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 12-ம் வகுப்பு...

சபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி... தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு அனுமதி அளிக்கும் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில்...

சபரிமலை தீர்ப்பை முன்னிட்டு கேரளா முழுவதும் பலத்த பாதுகாப்பு

சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ள நிலையில், தீர்ப்பு எதுவாயினும் அதனை அரசு நிறைவேற்றும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் வழிபட அனுமதியளித்து கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு...

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை - பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் போலீசார்கள்

சபரிமலையில் மண்டல- மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு மண்டல பூஜைகள் வரும் 17ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இதையடுத்து கேரள டிஜிபி லோக்நாத் பெஹாரா விடுத்துள்ள அறிக்கையில் ஐயப்பன்...

ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவன அதிபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கேரளா மாநிலம் மராடு கடற்கரை பகுதியில் தடையை மீறி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிய விவகாரத்தில் தொடர்புடைய ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவன அதிபர் சந்தீப் மேத்தா முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே...

மாற்றுதிறனாளி இளைஞரின் கால் விரல்களை பிடித்து குலுக்கி வரவேற்ற கேரள முதலமைச்சர்

தன்னை நேரில் சந்தித்த கையில்லாத மாற்றுதிறனாளி இளைஞரின் கால் விரல்களை பிடித்து முதலமைச்சர் பினராயி விஜயன் குலுக்கி வரவேற்ற புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ் என்பவர், முதலமைச்சரின் பொது நிவாரண திட்டத்திற்கு...

உச்சநீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட உள்ள மராடு அடுக்குமாடிக் குடியிருப்புகள்

கேரளாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட மராடு அடுக்குமாடிக் குடியிருப்புகள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி வரும் ஜனவரி மாதம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இடித்து அகற்றப்பட உள்ளது. கடற்கரை மண்டல ஒழுங்குமுறை விதிகளை மீறி கேரள மாநிலம் மராடு பகுதியில் கட்டப்பட்டிருந்த...

பினராயி விஜயனின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மம்முட்டி

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனின் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து வரும் நிலையில், பினராயி விஜயனுடன் மம்முட்டி இருக்கும் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். பினராயி விஜயனின் வாழ்க்கையை தழுவி மம்முட்டி நடிப்பில் ’ஒன்’ என்ற திரைப்படம் மலையாளத்தில் தயாராகி வருகிறது....