​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மலேசியாவின் புதிய பிரதமர் குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்படும்

மலேசியாவிற்கான புதிய பிரதமர் குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்படும் என, காபந்து பிரதமர் மஹதீர் பின் முகமது தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட அதிகார பகிர்வு தொடர்பான பிரச்சனை காரணமாக, மஹதீர் சமீபத்தில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய பிரதமரை...

என்.ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம்: தமிழக அரசு பரிசீலனை..!

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (NRC) எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றிலிருந்த அணை கடந்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி இடிந்து விழுந்தது....

அரசியல் நெருக்கடியால் அரசருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார் மலேசிய பிரதமர் மகாதீர்

மலேசியாவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் மகாதீர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை அரசருக்கு அனுப்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற மகாதீர் முகமதின் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி, மக்கள் நீதி...

CAA தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் விவாதித்த பின்பே தனது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான தனது கருத்துக்கள் கூட்டணிக் கட்சிகளுடன் விவாதித்த பின்பே வெளியானதாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன்...

கூட்டணி கட்சிகள் எதிர்த்தாலும், சி.ஏ.ஏ & என்.பி.ஆர்.க்கு சிவசேனா ஆதரவு

மகாராஷ்டிராவில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவுஆகியவற்றை, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மற்றும் தேசியவாத காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தபோதும், அவற்றை ஆதரிப்பதிலும், உறுதியாக அமல்படுத்தப்படுத்துவதிலும், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக இருக்கிறார்.  மகாராஷ்டிராவில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்துவதற்கு தடையில்லை...

கேரள ஆளுநரை தடுத்த எம்எல்ஏக்கள்... " GO BACK GOVERNOR" என்று முற்றுகையிட்டு முழக்கம்...!

கேரளாவில், ஆண்டின் முதல் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற வந்த ஆளுநரை தடுத்து, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. கேரள சட்டப்பேரவையில், நிகழாண்டின் முதல் கூட்டம் ஆளுநர் ஆரீஃப் முகமது கான் (Arif Mohammad Khan)...

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்...

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கூட்டணிக் கட்சியினருக்கும் இதில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மோடி தலைமையில் மீண்டும்...

பதவியேற்பு நிகழ்வில் தள்ளுமுள்ளு, மோதல்

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், சில இடங்களில்  மோதல், தள்ளுமுள்ளு சம்பவங்கள் அரங்கேறின.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சுயேட்சை கவுன்சிலர்களை திமுகவினர் கடத்திச் சென்றதாகக் கூறி...

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்பு

தமிழகத்தின் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகங்களில் பதவியேற்றுக் கொண்டனர்.  தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 515 மாவட்ட கவுன்சிலர்கள், 5 ஆயிரத்து 90 ஒன்றிய கவுன்சிலர்கள், 9 ஆயிரத்து 624...

முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அதிமுக அமோக வெற்றி

முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 13 யை அதிமுக கைப்பற்றியுள்ளது. இதில் முதலமைச்சரின் சொந்த ஒன்றியமான எடப்பாடியில் மொத்தமுள்ள 13 வார்டுகளில் அதிமுக 9 வார்டுகளையும், அதன் கூட்டணி கட்சியான பா.ம.க 3 வார்டுகளையும் கைப்பற்றி...