​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாமல்லபுரத்தையே குத்தகைக்கு எடுத்துருக்கோம்..! வசூல் பரிதாபங்கள்

வடிவேலு படத்தில் வரும் காமெடி காட்சி போல மாமல்லபுரத்தையே குத்தகைக்கு எடுத்திருப்பதாக கூறி தனியாக ஒருவர் பேரூராட்சி அதிகாரியின் ஒப்புதலுடன் அடாவடியாக பார்க்கிங் கட்டணம் வசூலித்து வருகின்றார். இரு நாட்டு தலைவர்களின் வருகைக்காக செய்த செலவுகளை ஈடுகட்ட மாவட்ட நிர்வாகம் செய்துள்ள வசூல் ஏற்பாடு...

தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு டிக்கெட் விற்பனை

பிகில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள பல திரையரங்குகளில் சிறப்புக் காட்சிக்கு என அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் எந்தப் படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது...

பிகில் டிக்கெட் இலவசம்..! ரசிகர்களுக்கு சத்திய சோதனை

நடிகர் விஜய்யின் பிகில் படத்திற்கான டிக்கெட்டை இலவசமாக தரப்போவதாக சில தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளது, சர்க்கார் படத்திற்கு பின்னர் இலவசத்தை எதிர்த்து வரும் விஜய் ரசிகர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது... வீட்டில் சாப்பாட்டில் சிறு கல் கிடந்தாலே கொந்தளிக்கும் இவர்கள், நடிகர் விஜய்யின்...

பழனி முருகன் கோவிலில் மொட்டை அடிக்க கூடுதல் கட்டணம் பெறுவதை தடுக்க பக்தர்கள் கோரிக்கை

பழனி முருகன் கோவிலில் மொட்டை அடிப்பதற்கு நாவிதர்கள் கூடுதல் கட்டணம் கேட்டு பெறுவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். தங்களது வேண்டுதல்களை...

தனியார் பள்ளியில் 3-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் 3 ஆவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். போதுப்பட்டி போஸ்டல் காலனியில் கீரின் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல்...

நீட் பயிற்சி மையங்களில் நடந்த சோதனையில் ரூ.30 கோடி பறிமுதல்

நாமக்கல் அருகே, தனியார் பள்ளி மற்றும் நீட் பயிற்சி மையத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில், கணக்கில் காட்டப்படாத 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்...

சிலிண்டர் டெலிவரி- கூடுதல் கட்டணம் வசூல்..!

வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகிப்பவர்கள், டெலிவரிக்கு என கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க மத்திய, அரசுக்கும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்ளுக்கும் உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் லோகரங்கன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,...

ரோகினி திரையரங்கிற்கு 100 மடங்கு அபராதம்..! ரூ150 க்கு ரூ15000 பழுத்தது..!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில், அரசு நிர்ணயித்த விலையை விட அதிகவிலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், திரையரங்கம் வசூலித்த டிக்கெட் கட்டணத்தைப் போல 100 மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் ரோகிணி திரையரங்கம் உள்ளது. இங்கு குறைந்த...

பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவைகுண்டம் பேட்மாநகர் பகுதியைச் சேர்ந்த முகமது யூனிஸ் என்பவர்...

விமானத்தில் உள்ளது போல உபசரிப்பு பெண்களை நியமிக்க ஐ.ஆர்.சி.டி.சி. திட்டம்

நாட்டிலேயே முதன்முறையாக தனியார் இயக்கும் தேஜஸ் விரைவு ரயில் சேவை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில் பல்வேறு சிறப்பு வசதிகளை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம் செய்துள்ளது. டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ இடையே இயக்கப்படவுள்ள இந்த ரயிலில், விமானங்களில் உள்ளது...