​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த பெண் குழந்தை மீட்பு

நாகை மாவட்டம் புதுப்பள்ளி பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கத் தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தையை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர். புதுப்பள்ளியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான கார்த்திக் என்பவரது இரண்டரை வயது பெண் குழந்தை சிவதர்ஷிணி, பக்கத்து வீட்டு தோட்டத்தில்...

ஆபத்தான இணையதள கேம்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக, சைபர் ட்ரை வயா ஆப்பை உருவாக்கி வரும் மத்திய அரசு

ப்ளூ வேல், மோமோ போன்ற தற்கொலைக்கு தூண்டும் ஆபத்தான இணையதள கேம்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக, அரசே புதிய கேம் ஆப்பை உருவாக்கி வருகிறது.  சைபர் ட்ரைவயா (cyber trivia) எனப்படும் இந்த ஆப், குழந்தைகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவர்கள் அளிக்கும் பதிலுக்கு...

உடலை வலிமைப்படுத்தும் பாடி பில்டர் துறையில் சாதனை படைத்து வரும் பெண்

பெண்கள் இன்று ஆண்களுக்கு இணையாக பல துறைகளில் முன்னேறி வருகின்றனர். ஆனால் குறிப்பிட்ட சில துறைகளை அவர்கள் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. உடலை வலிமைப்படுத்தும் பாடி பில்டர் துறையில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் துணிந்து இறங்கி சாதனை படைத்து வருகிறார். அது...

கோத்தகிரி அருகே மலைப்பாதையில் சென்ற கார் தீடீரென தீப்பற்றி எரிந்தது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மலைப்பாதையில் சென்ற கார் தீடீரென தீப்பற்றி எரிந்தது. கோவை பேரூரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர், மனைவி ராமலதா மற்றும் 2 குழந்தைகளுடன் உதகைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கோத்தகிரி அருகே தட்டப்பள்ளம் என்ற இடத்தைக் கடந்தபோது, காரின்...

ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படம்

ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள அசாமிய திரைப்படம் வில்லேஜ் ராக்ஸ்டாரை, மேலும் விளம்பரப்படுத்த தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என, இந்திய திரைப்பட கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கிராமப்புற குழந்தைகளின் திறமைகளையும், கற்பனைகளையும் வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் வகையில், அசாமிய மொழியில் வில்லேஜ் ராக்ஸ்டார்...

தொண்டை அழற்சி நோய்க்கான மருந்து பற்றாக்குறையால், இரு வாரத்தில் 13 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்

தொண்டை அழற்சி நோய்க்கான மருந்து பற்றாக்குறையால், டெல்லி அரசு மருத்துவமனை ஒன்றில், கடந்த 14 நாட்களில் 13 குழந்தைகள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹரிஷி வால்மீகி மருத்துவமனையில் தான் இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்று முதல் 9 வயதுக்குட்பட்ட பல...

ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு

ஈரான் நாட்டின் அஹவாஸ் நகரில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஊடுருவிய தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 25 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாக உள்நாட்டு தொலைக்காட்சிகள் அறிவித்தன. மறைமுக யுத்தத்தில் ஈடுபட்டு வந்த அரேபிய கிளர்ச்சியாளர்கள்...

இன்று சர்வதேச மகள்கள் தினம் உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடம்

பெண் குழந்தைகளை கௌரவிக்கும் வகையில் இன்று மகள்கள் தினம் உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.  ஆண்களின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் கடந்து செல்பவர்கள்தான் பெண்கள். அம்மாவாக, காதலியாக, தோழியாக, மனைவியாக, உறவினராக அன்பைப் பொழிகிறார்கள். இத்தனை பெண்களையும் தாண்டி, ஒருவனுக்கு மகிழ்ச்சியையும், வாழ்க்கை...

இந்தியாவில் தங்கம் விலை அதிகரித்தால் பெண் குழந்தைகள் வாழும் விகிதம் குறையுமென ஆய்வில் தகவல்

இந்தியாவில் தங்கம் விலை அதிகரித்தால் பெண் குழந்தைகள் உயிர் வாழும் விகிதம் குறையுமென ஆய்வு ஒன்று கணித்துள்ளது. 1972 முதல் 2005-ம் ஆண்டு வரை இந்தியாவில் 1 லட்சம் பிறப்புக்களை மும்பையைச் சேர்ந்த ஆய்வு அமைப்பு, தங்க விலை ஏற்ற, இறக்கத்தோடு ஒப்பீட்டுக்கு...

மனைவி மற்றும் குழந்தைகளை தீவைத்து கொளுத்திவிட்டு தற்கொலை முயற்சி என நாடகமாடிய கணவன்

சேலம் அருகே மதுபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை தீவைத்து கொளுத்திவிட்டு தற்கொலை முயற்சி என நாடகமாடிய கணவனை போலிசார் கைது செய்துள்ளனர். ஆத்தூரை அடுத்துள்ள அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த போர்வெல் லாரி ஓட்டுனரான கார்த்திக் என்பவருக்கும், பூமதி என்பவருக்கும் திருமணமாகி நிலா மற்றும்...