​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை, காஞ்சிபுரம், பெரம்பலூர் மாவட்டங்களில் நள்ளிரவில் மழை...

சென்னையிலும், காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர், உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஆயிரம்விளக்கு, கோடம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவுக்குப் பின் மிதமான மழை பெய்தது. காஞ்சிபுரத்தில் 2வது நாளாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது....

வீட்டின் முன்பு செல்போன் பேசியதை தட்டிக்கேட்ட முதியவர் கொலை

கும்பகோணம் அருகே வீட்டின் முன்பு செல்போன் பேசியதை தட்டிக்கேட்டபோது தாக்கப்பட்டதில் முதியவர் உயிரிழந்தது தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னம்பூரை சேர்ந்தவர் முதியவர் ரத்தினம். இவரது வீட்டிற்கு அருகே அதே பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் அடிக்கடி நின்று கொண்டு பேசி...

திறக்கப்பட்ட காவிரி - எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் விவசாயிகள்

மேட்டூர் அணை பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் நிலங்களை தயார் செய்து வைத்து தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேட்டூர் அணைக்கு 35 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டு இருக்கும் நிலையில், தண்ணீர் திறப்பை காட்டிலும், வரத்து அதிகமாக...

தேனி, சிவகங்கை மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை...

பிளக்ஸ் போர்டு வைத்தபோது மின்சாரம் தாக்கி இருவர் பலி

கும்பகோணம் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் மீது, பிளக்ஸ் போர்டு சாய்ந்ததில், மின்சாரம் பாய்ந்து இருவர் பலியானார்கள். சுவாமிமலையில் திருமண நிகழ்ச்சியையொட்டி, நண்பர்கள் சிலர் அப்பகுதியில் 10 அடி உயரத்தில் ஃபிளக்ஸ் போர்டு வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த...

1992-இல் 10ஆம் வகுப்பு படித்தவர்கள் ஒன்றுகூடிய நிகழ்ச்சி

கும்பகோணம் அருகே கொட்டையூரில் முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள வள்ளலார் பள்ளியில் 1992ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு பயின்ற பழைய மாணவர்கள் மீண்டும் அதே பள்ளியில் ஒன்றாக கூடி சந்தித்துக்கொண்டனர். வாட்ஸ்அப், ஃபேஸ் புக் மூலம் இணைந்து இந்த...

போக்குவரத்து கழக பணிமனையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கும்பகோணம் போக்குவரத்து கழக பணிமனையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான ஓரங்க நாடகம் அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,...

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 500 பேருந்துகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அனைத்து தரப்பு பயணிகளின் நலனையும் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய அரசுப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை சார்பாக, இரண்டு கட்டங்களாக, 1,500...

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்..!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பற்ற விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி கும்பகோணத்தில்  நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா. இவ்விழாவின் போது பல அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் மக்கள் கூடும்...

11 சிலை கடத்தல்.. பிரான்சு பெண் கைது..!

பழமையான 11 பஞ்சலோக சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்கமுயன்ற வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சுக்கு தப்பிச்சென்ற பெண் தொழில் அதிபர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி கோலாஸ் நகரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து 11 தொன்மையான சிலைகள்...