​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

“அரிசி ராஜா” வளர்ப்பு யானையாகப் பராமரிக்கப்படும் - வனத்துறை

பொள்ளாச்சி அருகே பிடிபட்டு, டாப்சிலிப் வரகளியாறு முகாம் கொண்டு செல்லப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டுள்ள காட்டு யானை அரிசி ராஜா அங்கு வளர்ப்பு யானையாகப் பராமரிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அர்த்தநாரிப்பாளையத்தில் விவசாயியை அடித்துக் கொன்றதோடு, அங்குள்ள வீடுகளையும் உணவுப் பொருட்களையும் சூறையாடி வந்த...

பிடிபட்டது “அரிசி ராஜா”

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மொத்தம் எட்டு பேரை மிதித்துக் கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை அரிசி ராஜாவை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.  கோவை மாவட்டம் வெள்ளலூர் வனப்பகுதியில் உலவித் திரிந்த அரிசி ராஜா, அவ்வப்போது ஊருக்குள்...

அரிசி ராஜாவை பிடிக்க பாரிக்கு மாற்றாக கபில்தேவ் கும்கி யானை வரவழைப்பு

பொள்ளாச்சி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் அரிசி ராஜா என்ற காட்டு யானையை பிடிக்க டாப்சிலிப் முகாமில் இருந்து கும்கி யானை கபில்தேவ் வரவழைக்கப்பட்டுள்ளது. அர்த்தனாரிபளையம் பகுதியில் பயிர்சேதத்தை ஏற்படுத்தி வந்த ஒற்றை காட்டு யானை வீடுகளுக்குள் புகுந்து அரிசியை மட்டுமே உண்பதால்,...

அரிசி ராஜா யானையை பிடிக்க வனத்துறை 2ஆவது நாளாக முகாம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானை அரிசிராஜா, தாடகநாச்சிமலை பகுதியில் முகாமிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த யானை தாக்கியதில் விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். மேலும் ஒரு பெண் காயமடைந்து கோவை மருத்துவமனையில்...

காட்டுயானை அரிசிராஜாவை பிடிக்கும் முயற்சி: கும்கி யானை ஒத்துழைக்க மறுப்பு

பொள்ளாச்சி அருகே அட்டகாசம் செய்து வரும் காட்டுயானை அரிசிராஜாவை பிடிப்பதற்காக கொண்டுவரப்பட்ட, பாரி என்ற கும்கி யானை பாகனுக்கு கட்டுப்பட மறுப்பதால், அதனை மீண்டும் டாப் ஸ்லிப்புக்கே அனுப்ப வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு...

காட்டு யானைக்கு பயந்து பெருமாள் மலைக்கோயிலில் தஞ்சமடைந்த மக்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அச்சுறுத்தி வரும் ஒற்றை காட்டு யானையால் அச்சமடைந்த பள்ளக்காடு, கனுவாக்காடு நொச்சிப்பள்ளம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடும்பத்தினருடன் பெருமாள் மலைக்கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர். வனத்தை விட்டு வெளியேறிய காட்டுயானை ஒன்று பொள்ளாச்சியை அடுத்து அர்த்தனாரிபாளையம், பருத்தியூர், கரூர்...

காட்டு யானை "அரிசி ராஜா"வை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானை அரிசி ராஜாவை பிடிக்க வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர். வனப்பகுதியை விட்டு வெளியேறி, ஊருக்குள் வீடுகளுக்குள் புகுந்து அரிசியை மட்டும் தின்றுவிட்டு சென்றுவிடுவதால் காட்டு யானைக்கு பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி மக்கள்...

ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு, பெண் படுகாயம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார். மூதாட்டி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆழியார் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை அர்த்தனாரி பாளையம் கிராமத்துக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வந்தது. அந்த யானை நேற்று...

மதம் பிடித்த கும்கி யானையை கல், கட்டைகள் கொண்டு தாக்கும் பாகன்கள்

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் மதம் பிடித்த கும்கி யானையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, பாகன்கள் அதன் மீது கற்களையும் கட்டைகளையும் வீசித் தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் 21 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 10க்கும்...

நடிகர் விக்ரம் பிரபுவின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விராட் கோலி

நடிகர் விக்ரம் பிரபுவின் மகனான விராட்டின் பிறந்தநாளன்று, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வீடியோ மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். கும்கி திரைப்படத்தில் அறிமுகமாகி இவன் வேற மாதிரி, அரிமா நம்பி உள்ளிட்ட 10 க்கும்...