​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குட்கா வழக்கு : செங்குன்றம் காவல் ஆய்வாளராக இருந்த சம்பத்திடம் சி.பி.ஐ. விசாரணை

செங்குன்றம் காவல் ஆய்வாளராக இருந்த சம்பத்திடம் குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குட்கா முறைகேடு வழக்கில் கடந்த வாரம் பல்வெறு இடங்களில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து செங்குன்றம் கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்டோரை சி.பி.ஐ கைது...

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் இன்று CBI நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்

குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டனர். குட்கா முறைகேடு வழக்கில், கிடங்கு உரிமையாளர் மாதவராவ் அவர்களது கூட்டாளிகள் உமாசங்கர், சீனிவாசராவ், உணவுபாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்வரித்...

குட்கா வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத்குமாருக்கு சிபிஐ சம்மன்

குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத் குமார் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.  குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட இடங்களில்...

குட்கா வழக்கில் மீண்டும் சிக்கிய நபர் வாகன சோதனையின்போது போலீசாரை மிரட்டியதாக கைது

திருவள்ளூரில் குட்கா வழக்கில் சிக்கிய நபர் மீண்டும் குட்கா பொருட்கள் கடத்திய நிலையில், வாகன சோதனையின்போது போலீசாரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டான். கடந்த இரு தினங்களுக்கு முன் தலக்காஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு குடோனில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை...

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற உள்ள காவல்துறை மானியக் கோரிக்கையின்போது, குட்கா வழக்கு, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பல்வேறு துறைகள் மீதான மானியக்...

குட்கா வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

குட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை வரவேற்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குட்கா ஊழலில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சரையும், காவல்துறை உயரதிகாரியையும் முதலமைச்சர் பதவி...

குட்கா விசாரணை நேர்மையாகவும், விரைவாகவும் நடத்த உள்துறை செயலாளர், சி.பி.ஐ. இயக்குநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

குட்கா ஊழல் வழக்கின் விசாரணை நேர்மையாகவும், விரைவாகவும் நடக்க நடவடிக்கை எடுக்குமாறு  சி.பி.ஐ. இயக்குநர் மற்றும் உள்துறை செயலாளருக்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில் குட்கா வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். வழக்கின் முக்கியத்துவத்தை...

குட்கா வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மீது புகார் கூறப்பட்ட குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. குட்கா ஊழல் புகாரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் தி.மு.க எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வழக்கு...

குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணை முழுமை பெற அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்து, சி.பி.ஐ விசாரணை முழுமையாக நடைபெற தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரணை நடைபெறவேண்டும்...

குட்கா வழக்கிற்கு அரசு மூடுவிழாவா? மு.க.ஸ்டாலின் கேள்வி

குட்கா முறைகேடு வழக்கின் விசாரணை அதிகாரிகளை மாற்றியும், கோப்புகளை மறைத்தும், அந்த வழக்கிற்கு மூடு விழா நடத்த, ஆளும் அதிமுக அரசு முயற்சிப்பதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரை காப்பாற்றும்...