​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மந்திரவாதியுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தும் கணவர்

கோவை அருகே விவசாயம் செழிக்க வேண்டி தன்னையும் தனது மகளையும் மந்திரவாதியுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள கணவன் வற்புறுத்துவதாக பெண் ஒருவர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரியா - தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மணி தம்பதியருக்கு...

சென்னையில் 100 சதவிதம் CCTV கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட யானைக்கவுனி காவல் நிலையம்

சென்னையில் 100 சதவிதம் சிசிடிவி கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட யானைக்கவுனி காவல் நிலையத்தில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார். சென்னையில் கண்காணிக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் சிசிவிடி கேமராக்களை பொருத்த, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை...

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது தொடர்பாக சபாநாயகர் தனபாலிடம் தகவல் தெரிவித்தது காவல்துறை

திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் சட்டப்பேரவைத் தலைவர் தனபாலிடம் தகவல் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர், காவல்துறையினர் உள்ளிட்டோரை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டமன்ற விதியின்படி ஒரு சட்டமன்ற உறுப்பினர்...

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு

கடலூர் அதிமுக எம்.பி. புகாரின் பேரில், பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற இந்து ஆலயங்கள் மீட்பு...

மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் - போக்குவரத்து தலைமைக் காவலருக்கு தங்கம்

மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் தங்கம் வென்ற போக்குவரத்து  காவலர் புருஷோத்தமனை, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, J-2 அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் புருஷோத்தமன். இவர் கடந்த மார்ச் 20ஆம்...

இயக்குநர் ஹரி, சகோதரர் அருண் விஜய் ஆகியோரின் தூண்டுதலின்பேரில், தனது தந்தை தனக்கெதிராக செயல்படுகிறார் : நடிகை வனிதா

திரைப்பட இயக்குநரும் தனது சகோதரியின் கணவருமான ஹரி, சகோதரர் அருண் விஜய் ஆகியோரின் தூண்டுதலின்பேரில், தனது தந்தை விஜயகுமார் தனக்கெதிராக செயல்படுவதாக நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.  சென்னை ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள தனது வீட்டை, படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுத்த தனது மகள்...

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக, வனிதா குற்றஞ்சாட்டியுள்ளார். நடிகர் விஜயகுமார் - மறைந்த நடிகை மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா,...

திருமண மோசடி வழக்கில் சிக்கிய சென்னை புளியந்தோப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் சஸ்பெண்ட்

திருமண மோசடி வழக்கில் சிக்கிய சென்னை புளியந்தோப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர், ஏற்கெனவே திருமணமானதை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதோடு பணம் மற்றும் நகைகளை அபகரித்து விட்டதாக பள்ளிக்கரணையைச் சேர்ந்த செந்தாமரை என்பவர்...

வீட்டை காலி செய்யாமல் மகள் வனிதா சொந்தம் கொண்டாடுவதாக நடிகர் விஜயகுமார் போலீசில் புகார்

படப்பிடிப்பிற்காக வாடகைக்கு எடுத்துவிட்டு, தனது வீட்டை காலி செய்ய மறுப்பதாக தனது மகளும் நடிகையுமான வனிதா மீது நடிகர் விஜயகுமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் நடிகர் விஜயகுமார் - மறைந்த நடிகை மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என...

முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் கொலை செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும் - கருணாஸ்

முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் கொலை செய்தாலும்  அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தான் அடிப்பேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே பயப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில்...