​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சூலூர் குட்கா ஆலை விவகாரத்தில் திமுக MLA கார்த்திக் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் குட்கா ஆலை விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ. உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலை கடந்த 28ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டு, மூட்டை...

ஆஸ்திரேலியாவில் 79 வயது பாதிரியார் மீது பாலியல் புகார் - வழக்கை சந்திக்குமாறு பாதிரியாருக்கு நீதிமன்றம் உத்தரவு

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆஸ்திரேலிய கத்தோலிக பாதிரியார்  George Pell, வழக்கை சந்திக்க வேண்டுமென்று மெல்பேர்ன் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரபல பாதிரியாரான 79 வயது  Pell, ரோமில் உள்ள வாட்டிகன் நிர்வாகத்திலும் நிதி அமைச்சர் உள்ளிட்ட உயர் பதவி வகித்தவர். இவர்...

ராஞ்சி மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத்துக்கு, சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய் தாக்கம் அதிகரித்ததை அடுத்து, கடந்த மார்ச்...

குட்கா விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்

குட்கா விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் கருத்தை கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மீது புகார் கூறப்பட்ட குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை...

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை

உத்தரப்பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அம்மாநில தேர்வு முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகின. இதில், பத்தாம் வகுப்பில் 98 பள்ளிகளும், 12ஆம் வகுப்பில் 52 பள்ளிகளும்...

Whatsapp நிறுவனர் Facebook-ல் இருந்து விலக திட்டம்

வாட்ஸ் அப் நிறுவனரான ஜான் கோம் ((Jan koum)) ஃபேஸ்புக் நிறுவன இயக்குநர் குழுவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். ஜான்கோம் கடந்த 2014-ஆம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ஆயிரத்து 900 கோடி அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை...

கமுதியில் தி.மு.க. பிரமுகரை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் தி.மு.க. பிரமுகரை தாக்கியதாக, செயல் அலுவலர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சி கடைகளை ஏலம் விட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, திமுகவைச் சேர்ந்த கேசவன் என்பவர் பேரூராட்சி அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு,...

குஜராத் மாநிலம் நவ்சாரியில் சாலையோரம் நின்றிருந்த காரில் திடீர் தீ

குஜராத் மாநிலம் நவ்சாரியில் (Navsari) சாலையோரம் நின்றிருந்த கார் ஒன்று பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. காரின்  முன்பகுதி திடீரென தீப்பற்றி எரிந்ததால், அந்த வழியாகச் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் ஏற்பட்ட...

கடையம் பேரூராட்சியில் பாழாய்ப் போகும் அரசு கட்டிடங்கள்

நெல்லை மாவட்டம் கடையத்தில் பல அரசுக் கட்டிடங்கள் பாழடைந்து கிடக்கும் நிலையில், வாடகை கட்டிடங்களில் அலுவலகங்கள் இயங்குவதால் மக்கள் வரிப்பணம் வீணாவதாக புகார் எழுந்துள்ளது.   இவை எல்லாம் நெல்லை மாவட்டம் கடையம் ஒன்றியத்தில்! அங்குள்ள புது கிராமம் தெருவில் இருக்கும் இந்த கட்டிடம்...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு : மேலும் 2 பேர் கைது

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் மதிப்பெண்களில் மோசடி நடந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சைபர்...