​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்ததாக 3 பேர் கைது

சிவகங்கை மாவட்டத்தில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்குடியைச் சேர்ந்த இளங்கோ மணி என்பவர் வெளிநாடு சென்றிருந்தபோது, அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 200 சவரன் நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச்...

அலகாபாத் நீதிபதி லஞ்சம் வாங்கியதாக CBI வழக்குப் பதிவு

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி S.N.சுக்லா மீது லஞ்சம் வாங்கியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு, வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்க மருத்துவ கல்லூரியிடம் அவர் லஞ்சம் வாங்கியதாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அட்வகேட் ஜெனரல் ராகவேந்திர சிங் புகார்...

சவுதி பெட்ரோல் பங்கில் பூமிக்கு அடியில் இருந்த எரிபொருள் கலன் வெடித்து விபத்து

சவுதியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பில் அங்கிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெட்ரோல் நிலையம் ஒன்றில் சிலர் தங்கள் கார்களுக்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது குண்டு வெடித்தது போல பூமிக்குள் இருந்து பெரு வெடிப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட பெட்ரோல் நிலைய...

ஆன்லைன் வர்த்தக மையத்தில் கைவரிசை - ஊழியர்கள் கைது

சென்னை அம்பத்தூரில் ஆன்லைன் வர்த்தகமையத்தில் பணிபுரியும் இளைஞர்கள் இருவர், டெலிவரி செய்ய வேண்டிய செல்போன்களை நூதன முறையில் திருடி நண்பர்களுக்கு விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவரது நண்பர் ஜான்சன் இருவரும் பட்டரவாக்கத்தில் உள்ள ஆன்லைன்...

கன்னி தீவும்..! நித்தியும்..! கடல்லே இல்லையாம்…! ஈகுவடார் நாடு மறுப்பு..!

நித்தியானந்தா ஈகுவடார் நாட்டில் எந்த ஒரு இடத்தையோ, அல்லது தீவுகளையோ விலைக்கு வாங்க வில்லை என்று மறுத்துள்ள ஈகுவடார்  நாட்டு தூதரகம், சர்வதேச அகதியாக குடியேறுவதற்கு அனுமதி கேட்ட நித்தியின் கோரிக்கையை ஏற்காததால் தங்கள் நாட்டை விட்டு அவர் வெளியேறி விட்டதாக...

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு துணிப்பையுடன் வருவோருக்கு பரிசு

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபதிருவிழாவுக்கு துணிப்பை, சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வருவதை ஊக்குவிக்க, பரிசாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...

போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தினோம் - விசி சஜ்ஜனார் ஐபிஎஸ்

தெலுங்கானாவில் கால்நடை பெண்  மருத்துவரை எரித்து கொன்ற கொடூர குற்றவாளிகள் நான்கு 4 பேரும்  சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றதால் அவர்களை சுட்டு வீழ்த்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  ஐதராபாத்தின் புறநகரான சாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த 27 வயதான...

கடத்தல் வழக்கில் பிடிப்பட்ட மணல் லாரியின் பேட்டரியை திருடிச் செல்லும் SI

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் கடத்தல் வழக்கில் பிடிப்பட்ட மணல் லாரியின் பேட்டரியை திருடியதாக காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்குள்ள காவல் நிலையத்தில் கார்த்திகேயன் என்பவர் உதவி ஆய்வாளராக இருந்தார். இவர் கடந்த 3ஆம் தேதி இரவு மணல் கடத்தல்...

ஊபர் டாக்சிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது - Uber நிறுவனம்

ஊபர் டாக்சிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊபர் டாக்சிகளில் பயணிக்கும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பதுடன், அவர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுவதாக பல நாடுகளில் புகார் எழுந்துள்ளது. இதை அடுத்து லண்டன்...

இரவு நேரத்தில் பெண்கள் வீடு திரும்ப உதவும் அபேய் திட்டம்

இரவு நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு உதவ ஆந்திர மாநில காவல்துறையினர் அபேய் என்ற பாதுகாப்பு திட்டத்தை தொடங்கியுள்ளனர். ஹைதராபாத் அருகே பெண் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து இரவு நேரத்தில் பெண்களை பத்திரமாக வீட்டுக்கு...