​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசியல் ஆகும் ஆக்சிஸ் வங்கி கணக்கு

ஆக்சிஸ் வங்கியின் உயர் பதவியில், முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்நவிசின் மனைவி அம்ருதா இருப்பதால், முக்கியமான கணக்கை அங்கிருந்து மாற்ற மகாராஷ்டிர அரசு தீர்மானித்துள்ளது. மகாராஷ்டிர காவல் துறையில் பணியாற்றும் சுமார் 2 லட்சம் பேரின் சம்பள கணக்குகள் ஆக்சிஸ் வங்கியால்...

மராட்டிய சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு வெற்றிபெற்றுள்ளது.  மகாராஷ்டிரத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்காக மகாராஷ்டிர சட்டப்பேரவை, இடைக்கால சபாநாயகர் திலிப் பாட்டில் தலைமையில் இன்று கூடியது. வந்தே...

நிறைவேறுமா மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்? சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் எதிர்ப்பு?

பாஜகவுக்கு எதிரான கூட்டணி மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைத்திருப்பது, மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மும்பைக்கும், அகமதாபாத்திற்கும் இடையே 508 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிவேக புல்லட் ரயில் விடப்பட உள்ளது. 17 பில்லியன் டாலர்கள் முதலீட்டில், ஜப்பான்...

மகாராஷ்ட்ராவில் மூன்று கட்சிகள் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிசை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு இன்று காலை 11.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைப்பது...

தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்பு - மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பம்

மகராஷ்டிராவில் திடீர் திருப்பமாக பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ்  முதலமைச்சராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மருமகன் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றார். மகாராஷ்டிர சட்டபேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜகவும், சிவசேனாவும், தனிப்பெரும்பான்மைக்கு கூடுதலான இடங்களில்...

மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி..! ஆளுநரிடம் இன்று உரிமை கோர முடிவு

சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணியான மகாராஷ்ட்ரா விகாஸ் அகாதி, இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிர நிலவரம் குறித்து சோனியா தலைமையில் நேற்று காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

ஆட்சியமைக்க இயலாது : பாஜக.... சிவசேனா கனவு பலிக்குமா?

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப் போவதில்லை என பாரதிய ஜனதா கட்சி அறிவித்திருக்கிறது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன், சிவசேனா ஆட்சியமைக்க உரிமை கோரலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  மகாராஷ்டிரா தேர்தலில், மொத்தமுள்ள 288 இடங்களில், பாஜக-சிவசேனா கூட்டணி பெரும்பான்மையை விட, கூடுதலாக 16...

மகாராஷ்ட்ரா, அரியானா மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு..!

மகாராஷ்ட்ரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மகராஷ்ட்ராவில் 60 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகின..... மகாராஷ்டிர மொத்தமுள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக, வாக்குப் பதிவு நடைபெற்றது. பாஜக-சிவசேனா கூட்டணிக்கும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி...

மகாராஷ்டிரா, ஹரியானாவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில், கொட்டு மழைக்கு இடையிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 5 புள்ளி 7 விழுக்காடு வாக்குகள்...

மகாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை சட்டமன்ற தேர்தல்

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில், நாளை இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில், பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக-சிவசேனா கூட்டணிக்கும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது. நாட்டின்...