​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அனுமதி

சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் எண்ணிக்கையை உயர்த்தவும், தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவக்கல்லூரிகளில் புதிய மருத்துவ பட்டமேற்படிப்புகளை துவங்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிய படிப்புகளை தொடங்குவதற்கான செலவீனங்களுக்காக 99 லட்சத்து...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. காலை 8 மணி அளவில் தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வருவதற்கு முன்னரே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வந்து சேர்ந்தனர்....

வன்முறையை கையில் எடுக்க வேண்டாம் : மா.பா.பாண்டியராஜன்

காவிரி விவகாரம் தொடர்பான போராட்டத்தில் வன்முறையை கையில் எடுக்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயலில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியராஜன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் விவகாரத்தில்...

25 சதவீத இட ஒதுக்கீடு தராத பள்ளிகள் மீது நடவடிக்கை - செங்கோட்டையன்

25 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றாத தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இயங்குபவையாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நாகதேவன்பாளையத்தில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

பின்லாந்தில் பள்ளி மாணவர்களுக்கு நடனமாடியபடி பாடம் எடுக்கும் ரோபோக்கள்

ஐரோப்பிய நாடான பின்லாந்தில் ரோபோக்கள் மூலம் பாடம் நடத்தப்படுவதால் மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக அதிகரித்துள்ளது. மனித உடலமைப்பு கொண்ட இந்த ரோபோக்கள் கங்னம் ஸ்டைல் ((Gangnam Style)) நடனமாடியபடி கணிதம் உள்ளிட்ட பாடங்களை மாணவர்களுக்கு நடத்தி வருகின்றன. மாணவர்களுடன் குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு...

பொறியியல் கலந்தாய்வுக்காக மாணவர்கள் சென்னைக்கு வரவேண்டாம் - அன்பழகன்

பொறியியல் கலந்தாய்வுகளில் பங்கேற்க மாணவ, மாணவிகள் சென்னைக்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் இணையத்திலேயே  விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 44 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார். ...

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை கே.பி. அன்பழகன் வழங்கினார்

தருமபுரி மாவட்டம் கொளப்பாறையில், அம்மன் கிரானைட்ஸ் நிறுவனம் சார்பில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கல்வி உபகரணங்களை வழங்கினார். அரூரில் இயங்கி வரும் அம்மன் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் முத்து ராமசாமி சார்பில், கொளப்பாறை அரசு தொடக்கப்பள்ளியில் இந்த நிகழ்ச்சிக்கு...

சொந்த ஊருக்குச் சென்று வீட்டையும் பள்ளியையும் பார்த்தார் மலாலா

நோபல் பரிசு பெற்ற மலாலா, பாகிஸ்தானில் உள்ள சொந்த ஊருக்கு சென்று தமது பள்ளி மற்றும் வீட்டைப் பார்த்து உணர்ச்சிப் பெருக கண்ணீர் சிந்தினார். பெண் கல்வியைப் பற்றிய தமது கட்டுரையால் தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்ட மலாலா, பாகிஸ்தானை விட்டு வெளியேறி...

2012க்குப் பின் முதன்முறையாக சொந்த ஊருக்கு ராணுவப் பாதுகாப்புடன் சென்றார் மலாலா

நோபல் பரிசு வென்ற மலாலா பாகிஸ்தானில் உள்ள தமது சொந்த ஊருக்கு ராணுவப் பாதுகாப்புடன் சென்றுள்ளார். பெண் கல்விக்காக குரல் கொடுத்து வந்த மலாலாவை அவரது 14 வயதில் தாலிபன் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்காக பிரிட்டனில் சிகிச்சை பெற்று தொடர்ந்து...

அரசு அறிவிக்கும் கோடைவிடுமுறை தேதியை தனியார் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் - செங்கோட்டையன்

அரசு அறிவிக்கும் கோடை விடுமுறை தேதியை தனியார் பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு எந்தவிதமான தேர்வுகளை கொண்டுவந்தாலும் அதை எதிர்கொள்ள பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு...