​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அவிநாசியில் மண்பானை மீது நடனமாடிய 321 பரதநாட்டிய கலைஞர்கள்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 321 பரதநாட்டிய கலைஞர்கள் மண்பானை மீது நடனமாடி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். பிருந்தாவன் கலாச்சேத்ரா சார்பாக நடைபெற்ற இப்போட்டியில், பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு 5 நிமிடங்கள் பானை மீது நடனமாடி தங்களின் கலைத்திறனை...

ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா தொடங்கியது

ஜெர்மனி நாட்டின் புகழ்பெற்ற பியர் திருவிழா தொடங்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய பியர் திருவிழாவாக வர்ணிக்கப்படும் இவ்விழா, முனிச்((Munich)) நகரில் வழக்கமாக உற்சாகத்துடன் ஆரம்பமாகியுள்ளது.... பாரம்பரிய உடையணிந்து முனிச் நகர மேயர் டைட்டர் ரெய்ட்டர்((Dieter Reiter)) தொடங்கி வைத்தார். விழா அரங்கிற்கு வெளியே...

சீனாவில் நடைபெற்ற சர்வதேச நாட்டுப்புறக்கலைகள் திருவிழா

சீனாவில் நடைபெற்ற சர்வதேச நாட்டுப்புறக்கலைகள் திருவிழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அந்நாட்டில் நான்னிங் ((Nanning)) என்ற நகரில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அரங்கில், சீன கலைஞர்களோடு, லாவோஸ், வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் கலைக்குழுக்கள் பங்கேற்றன....

65 கிலோ சாக்லேட்டில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஓட்டல் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சாக்லேட் விநாயகர் சிலை, வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. லூதியானாவில் ஓட்டல் நடத்தி வரும் ஹர்ஜிந்தர் சிங் குக்ரெஜா என்பவர், 65 கிலோ சாக்லேட்டில் விநாயகர் சிலை செய்து, தனது ஓட்டலில் காட்சிப்படுத்தியுள்ளார். இந்த சிலையை செய்வதற்கு 20...

வட கொரியாவில் கண்கவரும் மாஸ் கேம்ஸ் நிகழ்ச்சியின் அற்புதக் காட்சிகள்

வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் மாஸ் கேம்ஸ் எனப்படும் பாரம்பரிய கலை விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒன்றுபட்ட மக்களின் ஆற்றலை விளக்கும் வகையில் மனிதத் தலைகள், கரங்கள் இணைந்து கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிப்படிமங்களாக அரங்கேறின. ஆயிரக்கணக்கான நடனக்கலைஞர்கள், படைவீரர்கள்,...

கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றது ஆசிய விளையாட்டுப் போட்டி...

இந்தோனேசியாவில் நடைபெற்று வந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள், வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நிறைவடைந்தது.  இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா மற்றும் பாலெம்பாங் நகரில் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டியில், 45 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்து 300...

பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஏர் கிதார் சாம்பியன் போட்டி

பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஏர் கிதார் சாம்பியன் போட்டியை திரளான ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். கிதார் இசைக்கருவியை இசைப்பதைப் போன்ற பாவனையுடன், கைகளை அசைத்து இசைக்கேற்ப துள்ளலுடன் ஆடும் நடனம் ஏர் கிதார் (( Air guitar )) ஆகும். இந்த நடனத்துக்காக...

புகைப்படக் கலைஞர்களை நோக்கி பாய்ந்து வந்த பழுப்புக்கரடி

அமெரிக்காவில் பழுப்பு நிற கரடியிடம் இருந்து புகைப்படக் கலைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. அலாஸ்கா மாகாணத்தில் அதிகம் காணப்படும் உயிரினங்களில் ஒன்று பழுப்பு நிறக்கரடி. மனிதர்களை மூர்க்கத்தனமாக தாக்கும் இந்தக் கரடியால் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில்,...

கண்கவர் நடனங்களுடன் நடைபெற்ற கலாச்சாரப் பேரணி

கியூபாவின் தலைநகர் ஹவானாவில் வண்ண மயமான நடனங்களுடன் பேரணி நடைபெற்றது. மாலேகான் கடலை ஒட்டிய சாலையில் பலவகை நடனக் கலைஞர்கள் தனித்தனி காட்சிகளை சித்தரித்தவண்ணம் நடனமாடியபடியே சென்றனர். இசை வாத்தியங்கள் முழங்க கியூபாவின் கலாசாரத்தை விளக்கும் இந்த பேரணியில் புகழ்மிக்க கியூபா...

புதுச்சேரி கலைவிழாவை முதலமைச்சர் நாராயணசாமி முரசு கொட்டி தொடங்கி வைப்பு

3 நாட்கள் நடைபெறும் புதுச்சேரி கலைவிழாவை முதலமைச்சர் நாராயணசாமி முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.  புதுச்சேரியில் கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை கலை பண்பாட்டு மையம் சார்பில் 3 நாட்கள் நடத்தப்படும் புதுச்சேரி கலைவிழா  கடற்கரை  காந்தி திடலில் தொடங்கியது.    வரும் 16ஆம்...