​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

20 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல்..!

அக்டோபர் 20 ஆம் தேதி நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் தெற்குப் பகுதியில், அடுத்த ஓரிரு நாட்களுக்கு மழை தொடரும் என தெரிவித்துள்ளது....

விஜய் ஹசாரே கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் போது ரோகித் சர்மாவை கட்டித் தழுவி முத்தமிட்ட ரசிகர்

விஜய் ஹசாரே கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர், ரோகித் சர்மாவை கட்டித் தழுவி முத்தமிட்டதால் தர்மசங்கட சூழல் ஏற்பட்டது. பெங்களூருவில் நடைபெற்ற பீகார் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. போட்டியில் மும்பை அணி...

கர்நாடகத்தில் 456பேருக்குப் பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிப்பு

கர்நாடகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்துவது பற்றித் துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. பெங்களூரில் பன்றிக் காய்ச்சலால் 5பேர் உயிரிழந்தனர். கர்நாடகத்தில் 456பேருக்குப் பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பன்றிக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்துவது...

நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க புதிய சட்டம் - முதலமைச்சர்கள் அடங்கிய குழுக்களை அமைக்க மத்திய அரசு திட்டம்

காவிரி உள்பட 13 நதிகள் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு-கர்நாடகா, கோவா-கர்நாடகா, டெல்லி-ஹரியானா உள்பட பல்வேறு மாநில அரசுகளுக்கு இடையே கருத்து...

திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 3 பேர் கைது

திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குக்கல் தொட்டி அருகே டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி அதில் வந்தவர்களை விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்தனர். வாகனத்தை சோதனையிட்டதில், தக்காளி டிரேக்கள் போல் தெரியும்படி தனி அறை...

சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக குற்றச்சாட்டபட்ட ஓசூர் பேருந்து நிலையம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதோடு, சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பேருந்து...

கர்நாடக மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவுகிறது

கர்நாடக மாநிலத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக அந்த மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாநில தொற்று நோய் தடுப்புத்துறை இணை இயக்குநர் ஷெட்டி, கடந்த ஆகஸ்டு மாதம் வரை கர்நாடகத்தில் 39 பேருக்கு பன்றி காய்ச்சல்...

ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை

ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவ் வீடுகளில் நடந்த சோதனையில் 220-க்கும் மேற்பட்ட சிலைகள், கற்தூண்கள், கலைப் பொருட்கள் பறிமுதல்...

குடிபோதையில் இருந்த வழக்கறிஞர், சீருடையில் இருந்த போக்குவரத்துக் காவலர்களை சரமாரி தாக்குதல்

கர்நாடகத்தில் குடிபோதையில் இருந்த வழக்கறிஞர், சீருடையில் இருந்த போக்குவரத்துக் காவலர்களை சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. தேவநகரேவில், மதுபோதையில் இருந்த வழக்கறிஞர் ஒருவர், தம்மைத் தடுத்து நிறுத்திய போக்குவரத்துக் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்கள் மீது கற்களை வீசுவதும், அடித்துக் கீழே தள்ளுவதும்...

திம்பம் மலைப்பாதையில் 100 அடி ஆழத்தில் விழுந்த பேருந்து 6 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் பள்ளத்தாக்கில் விழுந்த தனியார் பேருந்து 6 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. 26ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே, மைசூரிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து நூறு அடி ஆழப் பள்ளத்தில் விழுந்ததில்...