​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பழனியில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், கரும்பு ஆகியவை சேதம்

கஜா புயல் காரணமாக, பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், கரும்பு ஆகியவை சேதமடைந்துள்ளன... மக்காச்சோளம், கடந்த 2 மாதங்களுக்கு முன் சாகுபடி செய்யப்பட்டது. அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில், புயல் காற்றில் மக்காச்சோளம் அடித்துச் செல்லப்பட்டது....

கஜா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விவசாய பயிர்கள் பெருத்த சேதம்

கஜா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விவசாய பயிர்கள் பெருத்த  சேதத்தை சந்தித்துள்ளன. கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், ஜாம்பு வானோடை ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. தென்னை மற்றும் அதுசார்ந்த தொழிலை நம்பியுள்ள...

புயல் பாதிப்பு பகுதிகளை வரும் செவ்வாய்க்கிழமை பார்வையிட உள்ளதாக முதலமைச்சர் பேட்டி

கஜா புயல் பாதித்த மாவட்டங்களை வரும் செவ்வாய்க்கிழமை பார்வையிட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடலோர மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகள் நடைபெறுவதாகவும் அவர்...

திருப்பூரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு அடியோடு சாய்ந்து சேதமாகியுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  அமராவதி அணை பாசன பகுதிகளான கண்ணாடிப்புத்தூர், நீலாம்பூர், பாப்பான்குளம், பெருமாள் புதூர், சாமராயபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில்...

கஜா புயலின் தாண்டவத்தால் கும்பகோணத்தில் வாழை, வெற்றிலை, கரும்பு பயிர்கள் நாசம்

கஜா புயலின் தாண்டவத்தால் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் இரண்டாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக வளர்க்கப்பட்ட வாழைத்தார்கள் சேதம் அடைந்ததாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சுமார் 5 கோடி ரூபாய்...

பெரியகுளம் அருகே கஜா புயலின் போது வீசிய காற்றால் வாழை மரங்களுக்கு பலத்த சேதம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கஜா புயலின் போது வீசிய காற்றால் வாழை மரங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று பெரியகுளம் அடுத்த கருவேல்நாயக்கன்பட்டியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரத்தும் மேற்பட்ட வாழை மரங்களும், 6...

கடலூர் மற்றும் தஞ்சையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் சேதம்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் தஞ்சையில் கஜாபுயலால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் சேதமடைந்துள்ளன. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கஜாபுயலால் நந்தபாடி,...

மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஜா புயல், கனமழை பாதிப்பு

கஜா புயலின் காரணமாக மதுரை மேலூர் பகுதியில் பல நூறு ஏக்கரில் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதோடு, ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து லேசான போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளலூர், உறங்கான்பட்டி, கோட்டநத்தம்பட்டி,...

திருத்தணி அருகே கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கார் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாயின.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை - திருப்பதி தேசிய...

திருச்சியில் பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து

திருச்சியில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். புத்தூர் அரசு மருத்துவமனை அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. குமரன் நகர் ராஜசேகரன் என்பவருக்குச் சொந்தமான இந்த கிடங்கின்...